இந்தியன் 2-வில் பட்ட அடி!.. தக் லைப்பில் உஷாரான உலக நாயகன்!.. பின்ன இருக்கத்தானே செய்யும்!...
5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். பல வெற்றி தோல்விகளையும், ஏற்ற இறக்கங்களையும் கண்டவர். அவர் நினைத்திருந்தால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நீடித்திருக்க முடியும். அப்படி பல வெற்றிப்படங்களை அவர் கொடுத்திருக்கிறார். ஆனால், மாற்று சினிமாவுக்கு அவர் ஆசைப்பட்டார்.
ரசிகர்களின் ரசனையை உலக சினிமா அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதே அவரின் தீராத தாகமாக இருக்கிறது. அதற்காகவே கடந்த 30 வருடங்களுக்கும் மேல் வேலை செய்து வருகிறார். நாயகன், குணா, தேவர் மகன், குருப்புனல், மகாநதி, ஹே ராம், தசாவதாரம், விருமாண்டி, விஸ்வரூபம் என எல்லாமே அதன் வெளிப்பாடுதான்.
அதற்காக நிறைய பணத்தையும் கமல் இழந்திருக்கிறார். ஆனாலும், தான் ஆசைப்படுவதில் இருந்து அவர் பின் வாங்கவில்லை. விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் 4 வருடங்கள் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அதன்பின் வெளிவந்த விக்ரம் திரைப்படம் அவருக்கு மெகா வெற்றியாக அமைந்ததோடு நல்ல லாபத்தையும் கொடுத்தது.
அதன்பின் சினிமாவில் மீண்டும் பிஸியான நடிகராக மாறினார் கமல், இந்தியன் 2, கல்கி, தக் லைப் என மளமளவென படங்களை புக் செய்தார். லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார். இந்த படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது.
பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார் கமல். ஆனால், படமோ ரசிகர்களை கவரவில்லை. எனவே, எதிர்பார்த்த லாபம் வரவில்லை. விக்ரம் ஹிட்டுக்கு பின் இந்தியன் 2 கமலுக்கு தோல்விப்படமாக அமைந்துவிட்டது. அந்த படத்தில் ஷங்கர் என்ன சொன்னாரே அதை அப்படியே செய்தார் கமல். கமல் சொன்ன சில மாறுதல்களையும் ஷங்கர் செய்யவில்லை.
எனவே, இந்தியன் 3-யின் கதையில் சில மாற்றங்களை சொல்லியதோடு, அதை செய்தால் மட்டுமே நடித்து கொடுப்பேன் என கறாராக சொல்லி இருக்கிறார் கமல். மேலும், இந்தியன் 2-வில் நடந்த தவறு இனிமேல் எந்த படத்திலும் நடக்கக் கூடாது. இனிமேல் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு வேகமாக படப்பிடிப்பை நடத்தக்கூடாது. நிதானமாக எடுக்க வேண்டும். பட ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ‘தக் லைப்’ படத்தின் சென்சார் வேலைகளை கூட முடித்துவிட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறாராம் கமல்!..