எந்த ஹீரோவும் தொட தயங்கிய சப்ஜெக்ட்… கமலால் கூட முடியாமல் முடங்கிய படங்கள்!..
Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே புது முயற்சிகளை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார். இதில் பல வெற்றி கண்டாலும் சில படங்கள் பாதியிலேயே முடங்கிய கதையும் நிறைய இருக்கிறது. அப்படி அவர் முயற்சி செய்து முடியாமல் போன முக்கிய படங்களின் பட்டியல்.
தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்க வேண்டிய மருதநாயகம் திரைப்படம். இந்திய திரை உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் 1997ம் ஆண்டு சென்னையில் மருதநாயகம் படத்தினை தொடங்கிவைத்தார். ஆனால் மிகப்பெரிய நிதி தேவைப்பட்ட பட்சத்தில் அப்படம் கைவிடப்பட்டது.
கமலுடன் திரிஷா, மோகன்லால் நடிக்க இருந்த திரைப்படம் மர்மயோகி. படத்தின் தயாரிப்பாளர் நிதி நெருக்கடியால் தவித்த நிலையில் இப்படமும் கைவிடப்பட்டது. கமல்ஹாசன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கி இளையராஜா இசையமைக்க இருந்தார். அதிவீர பாண்டியன் என்ற பெயரில் உருவாக இருந்த இப்படத்திற்கு தான் சாந்து பொட்டு சந்தன பொட்டு பாடல் உருவாக்கப்பட்டது. ஆனால் கங்கை அமரன் மற்றும் இளையராஜாவின் ஈகோ பிரச்னையால் படம் கிடப்பில் போடப்பட்டது.
பாரதி ராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் டாப்பு டக்கரு திரைப்படம் தொடங்கி நடத்தப்பட்டது. பாதி படத்தில் படத்தில் சிகப்பு ரோஜா போல சாயல் இருப்பதாக கூறி கைவிடப்பட்டது. சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாக இருந்த காமெடி திரைப்படம் கிருஷ்ண லீலா. இப்படத்தில் கௌதமி ஹீரோயினாக நடித்துவிட்டு பாதியில் விலக அவர் இடத்தில் ராகினி, ரோகிணி என பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடியாமல் போக படமும் கைவிடப்பட்டது.
கமல் இயக்கி நடிக்க இருந்த திரைப்படம் தலைவன் இருக்கின்றான். கமலின் அரசியல் நுழைவுக்கு முன்னர் இப்படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் கதையாக உருவாக இருந்த இப்படத்தில் அனுஷ்கா நடிக்க இருந்தார்.
ஆனால் கமலின் அரசியல் நகர்வு பிடிக்காமல் யாரும் இப்படத்தினை தயாரிக்க முன்வராமல் இப்படம் கை விடப்பட்டது. தசாவதாரம் படத்தின் முக்கிய கேரக்டரான பல்ராம் நாயுடுவை வைத்து உருவாக இருந்த சபாஷ் நாயுடு. விறுவிறுப்பாக தயாராகி வந்த இப்படமும் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது.