உங்க படம் பார்த்து 2 நாள் நான் துங்கல!.. பெருமையா இருக்கு!.. அட கமலே பாராட்டிட்டாரே!..

by சிவா |
உங்க படம் பார்த்து 2 நாள் நான் துங்கல!.. பெருமையா இருக்கு!.. அட கமலே பாராட்டிட்டாரே!..
X

Kamal: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹசன். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் பரிசோதனை முயற்சிகளை செய்ய துவங்கியவர். 27 வயதிலேயே தனது 100வது படமான ராஜ பார்வையில் கண் பார்வை இல்லாதவராக நடித்தார்.

உலக இலக்கியங்களை வாசிப்பார். உலக சினிமாக்களை பார்ப்பார் என்பதால் அவரிடம் இயக்குனர்கள் கவனமாக பேசுவார்கள். எந்த கதை சொன்னாலும் இது அந்த படத்தில் வந்துவிட்டது. இந்த கதையில் வந்துவிட்டது. இதை நான் எப்போதே செய்துவிட்டேன் என புள்ளிவிபரத்தோடு சொல்லுவார்.

ஆங்கில படங்களையும், வெப் சீரியஸ்களையும் அதிகம் பார்ப்பார். அதனால்தான் அவரின் படங்களில் ஹாலிவுட் பாணியில் காட்சிகளும், தொழில்நுட்பங்களும் இடம் பெற்றிருக்கும். ஹாலிவுட்டில் எந்த புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை தமிழ் சினிமாவில் எப்படி அறிமுகம் செய்யலாம் என்கிற தாகத்துடன் இருக்கும் கலைஞர் அவர்.

அப்படிப்பட்ட கமல்ஹாசனே சமீபத்தில் ஒரு இயக்குனரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவர்தான் விஷ்ணு வர்தன். தமிழில், அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அஜித்தை முதன் முதலாக மிகவும் ஸ்டைலாக இவர் காட்டிய பில்லா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இவர் இயக்கத்தில் வெளியான ஹிந்தி படம்தான் செர்ஷா (Shershaah). கார்கில் போரின் போது மரணடைந்த இந்திய ராணுவ வீரரான விக்ரம் பத்ரா பற்றிய கதை இது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விஷ்ணு வர்தன் ‘தமிழில் இருந்து ஹிந்திக்கு போகும் இயக்குனர்கள் அதே ஸ்டலை அங்கும் ஃபாலோ செய்வார்கள். ஆனால், செர்ஷா படத்தை வேறு மாதிரி எடுத்தேன்.

shershaa

என்னுடைய எந்த படத்தின் சாயலும் அதில் இருக்காது. இந்த படத்தை பார்த்துவிட்டு கமல்சார் எனக்கு போனில் தொடர்பு கொண்டார். ‘இந்த படத்தை பார்த்துவிட்டு 2 நாட்கள் நான் தூங்கவில்லை விஷ்ணு. பெருமையாக இருந்தது’ என சொன்னார். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரை போல ஒரு கலைஞர் என்னிடம் அப்படி சொன்னதை மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்’ என உருகியிருக்கிறார்.

ராணுவ வீரர் முகுந்த் வரதாராஜன் பற்றிய கதையை சிவகார்த்திகேயனை வைத்து சினிமாவாக எடுத்தார் கமல். எனவே, அவருக்கு செர்ஷா திரைப்படம் இன்ஸ்பிரேஷனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி உருவான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்தது. செர்ஷா திரைப்படமும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியது.

Next Story