ஆறு மாசம் அமெரிக்கா!... ஹாலிவுட்டில் ஒரு பிராஜெக்ட்!.. பக்கா பிளானில் கமல்ஹாசன்!...

by ராம் சுதன் |

5 வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். பல ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் கலை மீதுள்ள ஆர்வத்திலும் வித்தியாசமான, சிறந்த கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர்.

கமல்ஹாசன் நினைத்திருந்தால் ரஜினி போல தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து ஹிட் கொடுக்க முடியும். ஆனால், அவரின் ஆசை அதுவல்ல. தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற தாகம் அவரை பல புதிய முயற்சிகளை செய்ய வைக்கிறது. அதில், சம்பாதித்த பணம் போனாலும் அவர் கவலைப்படுவதில்லை.

இடையே சில வருடங்கள் இடைவெளி விட்டிருந்த கமலுக்கு விக்ரம் படத்தின் அவரை மீண்டும் ஓட வைத்திருக்கிறது. கல்கி, தக் லைப், இந்தியன் 2, இந்தியன் 3 என நடிக்க துவங்கினார். தக் லைப், இந்தியன் 3 சில மாதங்களில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இளம் நடிகர்களை வைத்து சினிமாக்களை தயாரித்து வருகிறது.

முன்பு அரசியல், பிக்பாஸ் என மட்டுமே இருந்த கமல் இப்போது தனது ரூட்டை மீண்டும் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறார். எனவே, கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 துவங்கவுள்ளது. இதுவரை 7 சீசன்களையும் கமலே நடத்தினார். எனவே, மீண்டும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு பிக்பாஸுக்கு போய்விடுவாரா என அவரின் ரசிகர்கள் கலக்கத்துடன் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 8வது சீசனை கமல் தொகுத்து வழங்கப்போகும் அறிகுறிகள் இல்லை. இந்தியன் 3, தக் லைப் படங்களை முடித்துவிட்டு அமெரிக்கா செல்லும் கமல் அங்கு 6 மாதங்கள் தங்க போகிறாராம்.

அங்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி கற்றுக்கொள்ளவிருக்கிறார். மேலும், ஹாலிவுட் நிறுவனத்தோடு இணைந்து அவர் செயல்பட திட்டமிட்டிருக்கிறார். எனவே, தக் லைப் படத்திற்கு பின் சில மாதங்கள் கமல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது. மொத்தத்தில் கமலின் அமெரிக்க பயணம் அவரின் திரை வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்படுகிறது.

Next Story