விஜய்யை பார்த்தா நிச்சயம் அதை செய்ய சொல்வேன்!.. கங்குவா பட நடிகர் சொன்ன சூப்பரான விஷயம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:31  )

நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜயின் இந்த அறிவிப்பு குறித்து கங்குவா பட நடிகர் நட்டி நடராஜ் பேசியிருப்பது விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள தங்குவா திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா நடிகர் விஜயை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லையே ஏன் என்கிற கேள்வியை பேட்டி எடுப்பவர் கேட்ட நிலையில், பலமுறை விஜய் சாரை சந்தித்து இருக்கிறேன். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஆசை. அவருக்கும் என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது விருப்பம். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது அமையாமல் போய்விட்டது என்றார்.

தளபதி 69 படம் கடைசி படம் என்பதால் இதற்கு மேல் உங்கள் கூட்டணியை காண முடியாது என தொகுப்பாளர் கேட்க விஜய் சார் அப்படி சொன்னாரா? என கங்குவா படத்தில் நடித்துள்ள நடிகர் நட்ராஜ் கேள்வி எழுப்பி, அப்படி சொல்லி இருந்தால் அவரை நேரில் சந்திக்கும் போது அரசியலில் இருந்து கொண்டே அப்பப்போ ஒரு படத்திலும் நடிக்க கோரிக்கை வைப்பேன்.

இது ரசிகர்களுக்காக இல்லை எனக்காக அவரைப் போல ஒரு சிறந்த நடிகரை பார்க்கவே முடியாது. கேமரா ஆன் செய்வதற்கு முன்பு வரை அமைதியாக இருப்பார். கேமரா ஆன் ஆனால் புயலாக மாறி நடித்துவிட்டு மீண்டும் அமைதியாகி விடுவார் என்றார்.

Next Story