சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் கங்குவா. சூர்யா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வித்தியாசமாக மிரட்டி இருக்கிறார். பாபி தியோல் வில்லனாக வருகிறார்.
இந்தப் படம் 38 மொழிகளில் வருகிறது. முதற்கட்டமாக 10 மொழிகளில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
இந்தப் படம் 2000 கோடி வசூல் செய்யும் முதல் படம் என ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார். அதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சூர்யாவிடம் கேள்வி எழுப்பினர். பெரிய கனவு கண்டால் என்ன குற்றம்? நானும் அவரது எண்ணத்தை நம்புகிறேன். நடந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று பட்டும் படாமலும் பேசிவிட்டார்.
படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா பேசும்போது அஜீத் சாரின் நம்பிக்கை தான் எனக்கு பலத்தைத் தந்தது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று கங்குவா படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும் போது அதீத நம்பிக்கையுடன் பேசினார். அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
‘;[pஎல்லாரு கையிலும் பாஸ் இருக்கும்னு நினைக்கிறேன். டிசம்பர் மாசம் இதே இடத்துல சக்சஸ் மீட் நடக்கும். அதுக்கான தேதியை நான் அறிவிப்பேன். உலகம் முழுவதும் உள்ள எல்லா விநியோகஸ்தரையும் கூப்பிட்டு பேன் இண்டியா ரெக்கார்டோட இந்த சக்சஸ் மீட் நடக்கும். அதனால எல்லாரும் இந்த பாஸை அப்படியே கையில வச்சிக்கோங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். அதே நேரம் வேட்டையன் படம் 1000 கோடியைத் தாண்டும்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா அதே நேரத்துல அதோட வசூல் ரொம்பவே கேள்விக்குரியதாகி விட்டது. அது மாதிரி ஆகிவிடக் கூடாது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…