கங்குவாக்கு வேட்டு வைத்த வேட்டையன்!.. சூர்யாவுக்கு நேரமே சரியில்லை!.. ஐயோ பாவம்!..
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் முக்கிய பண்டிகையின் போது வெளியாகும். குறிப்பாக தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் தங்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என எல்லா பெரிய நடிகர்களும் ஆசைப்படுவார்கள். ஏராளமான ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்தின் படங்கள் அப்படி வெளியாகி இருக்கிறது.
அதேபோல், தமிழர் புத்தாண்டான ஏப்ரல் 14, ஆயுத பூஜை, வினாயகர் சதுர்த்தி, ஆகஸ்டு 15 போன்ற நாட்களிலும் தங்கள் படங்களை வெளியிட நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு காரணம் தொடர்விடுமுறையாக 3 அல்லது 4 நாட்கள் கிடைக்கும்போது வசூலை அள்ளிவிடலாம் என்பதுதான் கணக்கு.
அதேநேரம், ரஜினி, விஜய் போன்ற அதிக வசூலை குவிக்கும் நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது சின்ன நடிகர்கள் தங்கள்படங்கள் வெளியாவதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அதிக தியேட்டர்கள் கிடைக்காது. அதனால் வசூலும் கிடைக்காது. எனவே, பெரிய படங்கள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது ரிலீஸுக்கு பின்னரோ சின்ன படங்கள் வெளியாகும்.
கடந்த 6 மாதங்களாக தமிழ் சினிமா துவண்டு கிடக்கிறது. ஏனெனில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படமே ஓடவில்லை. ஆனால், அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகவுள்ளது. கோட், தங்கலான், கங்குவா, ராயன், விடாமுயற்சி, அமரன், வணங்கான் என தொடர்ந்ந்து படங்கள் வெளியாகவிருக்கிறது.
இதில் சூர்யா நடித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆயுதபூஜை விடுமுறையை இப்படம் குறி வைத்திருக்கிறது. ஏனெனில் தீபாவளிக்கு அமரன் வருவது உறுதியாகி விட்டது. மேலும் அஜித்தின் விடாமுயற்சியும் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில், ரஜினியின் வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதியை குறி வைத்திருக்கிறது. ஆனால், இந்த தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்த தேதி உறுதியானால் கங்குவா படத்தில் ரிலீஸ் தள்ளிப்போகும் என அப்படத்தின் தயாரிப்பாளரே சொல்லி இருக்கிறார்.
எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னமும் சூர்யாவின் அடுத்த படம் வெளியாகவில்லை. கடந்த 2 வருடங்களாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்தால் இப்போது வேட்டையன் படம் மூலம் ரிலீஸ் தள்ளி போகும் நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.