சாருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... இளம்நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து தற்போது பெயர் சொல்லும் இளம்நடிகராக திகழ்பவர் கவின்.
இவர் நடிப்பில் வெளியான டாடா வசூலில் நல்ல சாதனை படைக்க சமீபத்தில் வெளியான ஸ்டார் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிடியில் கழுவி ஊற்றப்பட்டாலும் நடிக்கத் தெரிந்த நடிகர் என்னும் பெயரை இவருக்கு பெற்றுத்தந்துள்ளது.
அடுத்ததாக இவர் நடிப்பில் கிஸ் மற்றும் பெயர் சூட்டப்படாத படம் ஆகியவை உருவாகி வருகின்றன. தற்போதைய 2 கே கிட்ஸ்களை பொறுத்தவரை கவினுக்கு என தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதனால் தன்னுடைய படங்களை கவனமாக பார்த்துத் தெரிவு செய்யும் நிலையில் கவின் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அதாவது லோகேஷின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாரா நடிக்கிறார்.
அதிக சம்பளம் வாங்கினாலும் கூட கதைக்கு முக்கியத்துவம் அளிப்பவர் நயன்தாரா என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.
இந்த படத்தின் பூஜை நாளை ( ஜூலை 12) சென்னையில் நடைபெறுகிறது. படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 22-ம் தேதி துவங்குகிறது. செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தினர் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
கவின் நடிப்பில் முழுதாக இதுவரை நான்கு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. என்றாலும் கூட அவருக்கான ரசிகர் பட்டாளம் மற்றும் அவரது அடுத்தடுத்த படங்களின் லைன் அப்கள் வெகுவாக பலராலும் கவனிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- Tags
- Kavin
- nayanthara