விஜயுடன் தொடர்புபடுத்தி கிசுகிசு!.. முதன் முறையாக விளக்கம் சொன்ன கீர்த்தி சுரேஷ்!...
சினிமா துறையில் இருப்பவர்கள் வதந்திகளில் இருந்து தப்பவே முடியாது. ஒரு நடிகர் ஒரு நடிகையுடன் தொடர்ந்து படங்களில் நடித்தால் உடனே இருவருக்கும் தொடர்பு என எழுதி விடுவார்கள். அதுவும் அவர்கள் எங்கேயாவது சந்தித்துக்கொண்டால் அவ்வளவுதான். கதை கட்டி விடுவார்கள்.
இதிலிருந்து நடிகர், நடிகைகள் தப்பவே முடியாது. ஆனாலும் சூர்யா, கார்த்தி போல சில நடிகர்கள் வதந்திகளில் சிக்க மாட்டார்கள். ஏனெனில், ஷுட்டிங் முடிந்தவுடன் நேராக வீடு என அவர்கள் இருப்பதே அதற்கு முக்கிய காரணம். இளம் நடிகர்களில் பார்ட்டிகளுக்கு போவர்கள். அங்கு சில இளம் நடிகைகளும் வருவார்கள்.
அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டாலே எல்லாவற்றையும் இணைத்து ஒரு கதை சொல்லி விடுவார்கள். இது பல வருடங்களாக நடப்பதுதான். சமீபகாலமாக நடிகை விஜயை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது. அதற்கு காரணம் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது அவருடன் இல்லை.
முன்பெல்லாம் விஜய் கலந்துகொள்ளும் பட விழாக்களில் அவரின் மனைவி சங்கீதாவும் வருவார். இப்போது அவரை பார்க்க முடியவில்லை. ஒருபக்கம், விஜயும் திரிஷாவும் நெருங்கி பழகுகிறார்கள். வெளிநாடுகளில் இருவரும் சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. இப்போது விஜயின் அலுவலகம் இருக்கும் அதே அபார்ட்மெண்டில் திரிஷாவும் தங்கி இருக்கிறார். பிறகு சொல்ல வேண்டுமா?!..
திரிஷாவை போலவே விஜயோடு கீர்த்தி சுரேஷையும் இணைத்து செய்திகள் வெளியானது. விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவின் வீட்டின் அருகே கீர்த்தி சுரேஷ் குடியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த வதந்திகளுக்கு விஜயோ, கீர்த்தி சுரேஷோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ் ‘உண்மைக்கு விளக்கம் சொன்னால் தெளிவாகும். அதுவே வதந்திக்கு விளக்கம் சொன்னால் அது உண்மை ஆகிவிடும் என விஜய் சாரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். அது மிகவும் உண்மை. தேவையில்லாத விஷயங்களுக்கு என்னுடைய எனர்ஜியையும், விளக்கத்தையும் தரமாட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.