கடைசில லாரன்ஸுமா? ஓவியாவின் புகைப்படத்தை பதிவிட்டு மாட்டிக் கொண்ட மாஸ்டர்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:12  )

சமீபகாலமாக ஓவியாவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஓவியா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஓவியா மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் பிரித்விராஜுக்கு நாயகியாக முதன் முதலில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகுதான் தமிழில் அறிமுகமானார்.

முதல் படமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து மதயானைக் கூட்டம், காஞ்சனா, மன்மதன் அம்பு, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவும் மாறினார். இருந்தாலும் தொடர்ந்து அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. அந்த நேரத்தில்தான் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு சமூக வலைதளத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் ஓவியா.

முதன் முதலில் ஓவியாவிற்குத்தான் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஹேஷ்டேக் ஆரம்பித்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவை கொடுத்தார்கள். பிக்பாஸுக்கு பிறகு ஓவியாவின் ரேஞ்சே வேறு மாதிரியாக போனது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த இடத்தை அவரால் அடையமுடியவில்லை.

இந்த நிலையில்தான் ஒவியாவின் அந்தரங்க வீடியோ என ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பற்றி கேரளாவில் ஓவியா புகார் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது ஓவியாவிற்கு அவருடைய பாய்ஃபிரண்டுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அந்த கோபத்தினால் கூட இந்த வீடியோவை அவருடைய பாய்ஃபிரண்ட் வெளியிட்டிருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள்.

இப்படி ஓவியாவின் பெயரே அடிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நடிகர் லாரன்ஸ் திடீரென ஓவியாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஓவியா என்ற கேப்ஷனுடன் வெளியிட்டிருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் லாரன்ஸ் அண்ணா கடைசில நீங்களுமா? என கேட்டு வருகின்றனர். லாரன்ஸ் எந்த நோக்கத்தில் வெளியிட்டாரோ என்று தெரியவில்லை.ஆனால் ரசிகர்கள் அதை வேற கோணத்தில் பார்க்கின்ற்னர்.

Next Story