சூப்பர் ஸ்டார் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக நான் காரணமா?.. பீதியை கிளப்பாதீங்க!.. லோகேஷ் நெத்தியடி!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:41:08  )

சூப்பர் ஸ்டார் உடல்நிலை குறித்து தேவையில்லாத வதந்திகளையும் தன்னுடைய கூலி படத்தால் தான் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் சிலர் சொல்வது சுத்தப் பொய் என்று விளக்கம் கொடுத்துள்ளார் கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

தளபதி விஜய்யின் லியோ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜுக்கு அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கும் ஜாக்பாட் அடித்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, செளபின் சாஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் தேதி 30ம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சும்மா ஒரு கங்கு கிடைத்தாலே ஊதிப் பெரிதாக்கும் யூடியூப் சேனல்களும் சில மீடியாக்களும் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் ஸ்டன்ட் காட்சிகளில் ரஜினிகாந்தை புரட்டி எடுத்தது தான் காரணம் என பேச ஆரம்பித்து விட்டனர்.

ரஜினிகாந்துக்கு வயிற்றில் பிரச்சனை வரக் காரணமே லோகேஷ் கனகராஜ் தான் என்றும் கூலி படத்தில் இதற்கு மேல் சூப்பர் ஸ்டார் நடிக்கக் கூடாது என்றும் ஏகப்பட்ட வதந்திகள் பரவின.

வலைப்பேச்சு அந்தணன், செய்யாறு பாலு போன்ற யூடியூப் பிரபலங்கள் லோகேஷ் கனகராஜ் மீது அபாண்ட பழி சுமத்தி வந்த நிலையில், அதையெல்லாம் பார்த்து பேனிக் ஆகிவிட்டேன் என்றும் இப்படியெல்லாம் பீதி கிளப்பாதீங்க, ரஜினி சார் ஒரு மாசத்துக்கு முன்பே அறுவை சிகிச்சையற்ற உடல்நல சிகிச்சையை செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்து விட்டார்.

அதற்கு ஏற்றவாறு அவருடைய போர்ஷன்களை அமைத்து இருந்தோம். வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் அவர் மீண்டும் கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார். எதையும் கூடவே இருந்து பார்த்தது போல சிலர் யூடியூப் சேனல்களில் பேசி வருவது எங்களுக்கு ரொம்பவே அச்சத்தை தருகிறது என லோகேஷ் கனகராஜ் விளாசியுள்ளார்.

மேலும், விஜய் அண்ணா நடிக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ஆனால், அவருடைய ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் சினிமாவை விட பெரிய விஷயத்தில் உள்ள நிலையில், அதற்கு என்னால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும் என லோகேஷ் கனகராஜ் விளக்கியுள்ளார்.

Next Story