ஆரம்பிக்கலாமா!.. LCU-வில் இணைந்த ராகவா லாரன்ஸ்..? ஆரம்பமாகும் லோகேஷ் கனகராஜ் benz...!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். படங்களில் நடித்து பெரும் புகழையும் பெற்றதை காட்டிலும் சமூக சேவைகளை செய்து தமிழக மக்கள் பலரின் உள்ளங்களில் குடியிருக்கின்றார் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதுடன் காஞ்சனா படத்தின் பாகங்களையும் இயக்கி வருகின்றார்.
காஞ்சனா 4வது பாகத்தையும் விரைவில் அவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் பிஸியாக நடித்து வருகின்றார். நேற்று நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படமான காலபைரவா படத்தின் அறிவிப்பு அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்க இருக்கின்றார்.
விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் தம்பி எல்வின் லீட் கேரக்டரில் நடித்துள்ள புல்லட் படத்திலும் ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அவரின் பிறந்தநாளான நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் ராகவா லாரன்ஸ் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சு அடிபட்டு வந்தது. அது தற்போது உண்மையாகி இருக்கின்றது. அதன்படி லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக இருக்கும் பென்ஸ் படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தில் கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த படம் எல்சியூ-வில் இணையுள்ளதாக கூறப்பட்ட வந்த நிலையில் அதனை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்து இருக்கின்றார். ராகவா லாரன்ஸை தன்னுடைய எல்சியூ-வில் வரவேற்று இருக்கின்றார். லோகேஷ் கனகராஜன் உதவி இயக்குனரான பாக்யராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருக்கின்றார். அவரது நிறுவனம் முன்னதாக பைக் கிளப் என்கின்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது.
அதற்கு அடுத்ததாக பென்ஸ் என்ற இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க இருப்பதாகவும், தன்னுடைய யுனிவர்சிட்டிக்கு ராகவா லாரன்ஸை இந்த வீடியோ மூலம் லோகேஷ் கனகராஜ் வரவேற்று இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ஏற்கனவே இவரது யூனிவர்சில் கார்த்திக், சூர்யா, விஜய் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது ராகவா லாரன்ஸ் இணைந்திருக்கின்றார். நடிகர் ராகவா லாரன்ஸ் கையில் கத்தியுடன் மீன் வெட்டுவதும் அவர் மீது ரத்தம் தெரிப்பதும் அந்த வீடியோவில் காணப்படுகின்றது.