முடிவுக்கே வராத பஞ்சாயத்து.. சாஷ்டாங்கமா விழுந்த லைக்கா.. விடாமுயற்சிக்கு முடிவு என்ன?..

விடாமுயற்சி: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்தை வைத்து இயக்கி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தை விடாமல் முயற்சி செய்து எடுத்து வந்தார்கள். ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்தை சுற்றி வலம் வருகின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் நடிகர் அஜித்தின் ஒரு திரைப்படம் கூட திரையரங்குகளில் வெளியாகவில்லை.
துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் மகிழ்திருமேனி. முதலில் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது என்று கூறி வந்தார்கள். ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இந்த திரைப்படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் என்பது பலருக்கும் தெரியும். இந்த திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவல் என்பதால் முறைப்படி தயாரிப்பு நிறுவனத்திடம் ரீமேக் உரிமையை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் லைக்கா நிறுவனம் அதை செய்ய தவறிவிட்டது.
தற்போது படம் டீசர் வெளியானதை தொடர்ந்து பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இந்த பஞ்சாயத்து இழுபறியாக சென்று கொண்டிருக்கின்றது. படம் முழுவதுமாக முடிக்கப்பட்டு படத்தின் டப்பிங் வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என்கின்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தார்கள்.
ஆனால் நியூ இயருக்கு முந்தைய தினம் லைக்கா நிறுவனம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகவில்லை என்கின்ற அறிக்கையை வெளியிட்டது. இதற்கு பின்னால் இருப்பது இந்த நஷ்ட ஈடு பிரச்சனை தான். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் கேட்கும் தொகையை லைக்கா நிறுவனம் கொடுக்க மறுக்கின்றது. அதற்கு பதிலாக படத்தை நீங்களே ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை நீங்களே உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யுங்கள் என்று சொன்னதற்கு அதற்கும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த நிறுவனம் தங்களுக்கு வேண்டிய தொகையை மட்டும் கொடுத்தால் போதும் என்று மிகவும் உறுதியாக இருக்கிறார்களாம். இதனால் லைக்கா நிறுவனம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி இருக்கின்றது.
தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று கூறிவரும் நிலையில் இந்த பஞ்சாயத்து முடிவடையாமல் படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகின்றது. இதனால் ரசிகர்கள் லைக்கா நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.