Amaran: உங்களுக்கு என்ன கேடு?!.. துப்பு இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க!.. அமரனை போட்டு பொளக்கும் நடிகை!..

Published on: November 7, 2024
---Advertisement---

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

மேலும் கமலஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். படம் வெளியானது முதலே மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றது. வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றது. ஐந்தாவது நாளான இன்று 150 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வருடம் வெளியான படங்களிலேயே கலெக்ஷனிலும் கண்டென்ட்டிலும் சிறந்த படமாக இருந்தது அமரன் தான். இந்த திரைப்படம் வெளியானதற்கு பிறகு சில பிரச்சனைகள் எழுந்து வந்தது. அதாவது மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் ஒரு பிராமணர். அதனை இயக்குனர் எந்த இடத்திலும் குறிப்பிட்டு காட்டவில்லை. அவர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக அவரது கழுத்தில் சிலுவை செயினை போட்டு அடையாளப்படுத்தியிருந்தார். அப்படி இருக்கையில் மிக முகுந்த் வரதராஜனை மட்டும் பிராமணர் என எங்கேயுமே அடையாளப்படுத்தாதது ஏன் என்று பலரும் கூறுகின்றார்கள். இதற்கு நேற்று நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்திருந்தார்.

அதில் மேஜர் முகுந்து வரதராஜன் ஒரு தமிழன் மற்றும் பெருமைமிகு இந்தியன் என்பதை படத்தில் காட்டினால் போதும் என்று முகுந்த் அவர்களின் தந்தை வரதராஜன் கேட்டுக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் படத்தில் அதை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக விளக்கம் கொடுத்திருந்தார். இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் முகுந்த் வரதராஜனின் அடையாளம் மறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்து வந்துள்ளது.

அந்த வகையில் பிரபல நடிகையான மதுவந்தி அமரன் படத்தின் இயக்குனரை கோபமாக திட்டி இருக்கின்றார். ஒரு படம் எடுத்தா அவர் ஒரு சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்று அந்த சமுதாயத்தை சித்தரிக்க துப்பு இருக்கணும், தைரியம் இருக்கணும், அத நீங்க யாரும் செய்வதில்லை.. அவ்வளவு பெரிய ஆர்மி ஆபீஸர் பத்தி படம் எடுக்குறாங்க..

அவர் பிராமணர்னு காட்ட உங்களுக்கு என்ன கேடு, யார பாத்து பயப்படுறீங்க.. சினிமா துறையில் இருந்து இந்த கேள்வியை நான் கேட்கிறேன். இதனால எனக்கு பட வாய்ப்பு வரவில்லை என்றால் கூட கவலை இல்லை. முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட உங்களுக்கு என்ன கேடு வந்தது என்று மிகவும் கோபமாக பேசி இருக்கின்றார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment