Categories: latest news

அஜித் சார் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை இதுதான்!.. மனம் திறந்த மகிழ் திருமேனி..!

தமிழ் சினிமாவில் தடம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் மகிழ் திருமேனி. அதனை தொடர்ந்து இவர் 5 திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். இந்த ஐந்து திரைப்படங்களும் வித்தியாசமான கதைகளை கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த மகிழ் திருமேனி அவர்களுக்கு அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்தது. அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிப்ரவரி 6ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். விடாமுயற்சி படத்தின் கதைக்களத்தை பொருத்தவரையில் ரோட் டிராவல் ஜானரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார். பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் மகிழ்திருமேனி பல்வேறு youtube சேனல்களுக்கு சென்று படம் குறித்து பிரமோஷன் செய்து வருகின்றார். அதில் விடாமுயற்சி திரைப்படம் குறித்தும் அது உருவான விதம் குறித்தும் பேசி வருகின்றார்.

இந்த திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்த அவர் இப்படத்தில் தான் எப்படி கமிட்டானேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ஒரு நாள் என் வீட்டில் நான் படத்தின் திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தபோது அஜித் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது.

அதில் அவர் அஜித் அவர்களின் அடுத்த திரைப்படத்தை நீங்கள் தான் இயக்கப் போகிறீர்கள் என்று கூறினார். அதைக் கேட்டு நான் மிகவும் ஷாக்கானேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் அஜித் அவர்கள் உங்களிடம் பேசுவார். அடுத்த வாரம் நீங்கள் லண்டன் சொல்ல வேண்டி இருக்கும் என்று கூறினார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

பின்னர் சிறிது நேரம் கழித்து அஜித் சார் லைனில் வந்தார். அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை என்னை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பலாம் என்பதுதான். அவர் சொன்ன வார்த்தை அதைக் கேட்டு எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு நான் தூங்கவே இல்லை. அதன் பிறகு அடுத்த வாரம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சந்திப்பதற்காக லண்டன் சென்றிருந்தேன்.

அப்போது அஜித் சாரும் அங்கு வந்திருந்தார். முதன் முறையாக அவரை நான் நேரில் சந்திக்கின்றேன். அவ்வளவு எளிமையாக வந்திருந்தார். அந்த சந்திப்பை என்னால் மறக்கவே முடியாது’ என்று அந்த பேட்டியில் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார் மகிழ்திருமேனி.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

3 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago