யாருப்பா அந்த பிரகாஷு?.. திரிஷாவின் லவ்வரை ஒரு வழியா ரிவீல் பண்ண மகிழ் திருமேனி!..

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் எங்கும் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும் நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
விடாமுயற்சி விமர்சனம்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. படம் வெளியான முதல் நாள் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தார்கள். ஆனால் அதுக்கு அடுத்த நாட்களில் தொடர்ந்து படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிக அளவில் வந்து கொண்டிருந்தது.
நடிகர் அஜித்தை பொருத்தவரை தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருக்கக்கூடியவர். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு ஒரு சாதாரண நடிகராக இந்த படத்தில் நடித்திருக்கின்றார். இது அஜித் ரசிகர்களால் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படத்தில் எந்த ஒரு மாஸ் காட்சிகள் இல்லை.
மேலும் வழக்கமான அஜித் திரைப்படம் போல இந்த திரைப்படம் இல்லை என்று தொடர்ந்து படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை படத்தின் வசூலில் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை. 5 நாட்களில் இந்திய அளவில் 65.25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருக்கின்றது.
திரிஷாவின் லவ்வர் பிரகாஷ்: இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் திரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இடையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திரிஷா அஜித்தை விட்டு பிரிந்து செல்வதற்கு முடிவு செய்வார். அது மட்டும் இல்லாமல் நடிகை திரிஷாவுக்கு இப்படத்தில் பிரகாஷ் என்கின்ற வேறு ஒரு நபருடன் தொடர்பு இருக்கும்.
அது தெரிந்தும் கூட அஜித் அது குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல் இருப்பார். மேலும் திரிஷா விவாகரத்து கேட்ட போதும் அதை கொடுப்பதற்கு சம்பாதித்து இருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா அடிக்கடி ஃபோனில் பிரகாஷ் என்பவர் உடன் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்குமே தவிர அவர் யார் என்பதை படத்தில் காட்டி இருக்க மாட்டார்கள்.
மகிழ் திருமேனி ரிவீல்: இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் யார் அந்த பிரகாஷ் என்பது குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'படத்தில் பிரகாஷ் என்பது ஒரு இன்சிடென்ட். படம் அவரைப் பற்றியது கிடையாது. அது பார்ப்பவர்களுடைய யூகம். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
படத்தில் அவர் இருந்தாலும் இல்லை என்றாலும் கதை நகரும். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவேளை அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதுதான் அந்த படத்திற்கான ஒரு ஈர்ப்பாக இருக்கும்' என்று பதில் அளித்து இருக்கின்றார்.