விடாமுயற்சி கதை விவகாரம்!.. அத பத்தி இப்ப கேக்காதீங்க.. இப்படி நைஸா நழுவுனா எப்படி பாஸ்..

by ramya suresh |
விடாமுயற்சி கதை விவகாரம்!.. அத பத்தி இப்ப கேக்காதீங்க.. இப்படி நைஸா நழுவுனா எப்படி பாஸ்..
X

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள். கடந்த 2 வருடங்களாக அஜித்தின் திரைப்படம் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தால் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை எடுத்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

விடாமுயற்சி விமர்சனம்: கடந்த 2 வருடங்களாக அஜித்தின் தரிசனத்தை திரையரங்குகளில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி படம் உலகம் எங்கும் ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி அஜித் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. முதல் நாளில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் அடுத்த அடுத்த நாட்களில் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லை என்று கூறி வருகிறார்கள். மேலும் வழக்கமான அஜித்தை இந்த திரைப்படத்தின் காண முடியவில்லை. கதையில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள், இரண்டாம் பாதி மிகவும் ஸ்லோவாக இருந்தது என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.

இந்த விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூலிலும் தொய்வு ஏற்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் படம் வெளியாகி 5 நாட்களான நிலையில் இந்திய அளவில் 65.25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கின்றது.

மகிழ் திருமேனி பேட்டி: விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். படம் ஆரம்பித்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனே ரசிகர்கள் இது பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் ரீமேக் என்பதை கூறிவிட்டார்கள். தொடர்ந்து படம் வெளியான பிறகும் பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

அது மட்டும் இல்லாமல் படம் ரிலீஸ் க்கு முன்னதாகவே இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தின் மூலக்கதை தன்னுடையது அல்ல, நடிகர் அஜித் தேர்வு செய்த ஒரு கதையை நான் இயக்கினேன் என்பதை அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மகிழ் திருமேனி அவர்களிடம் இப்படத்தின் கதை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மகிழ் திருமேனி கூறியிருந்ததாவது 'தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்டை நான் செய்தேன். இப்படத்தின் கதை குறித்து பேசுவதற்கான நேரம் இது கிடையாது. அஜித் அவர்கள் தனக்கு கொடுத்த வேலையை நான் சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றேன். நிச்சயம் ஒரு இரண்டு மாதம் கழித்து இப்படம் எப்படி உருவானது. என்ன நடந்தது, எப்படி படத்தின் கதையை கொண்டு சென்றோம் என்பதை பற்றி தெளிவாக பேசலாம். தற்போது இந்த திரைப்படம் நான் இயக்கிய படம், என்னுடைய படம்' என்று கூறி இருக்கின்றார்.

Next Story