மொத்தமா சேர்ந்து செஞ்சிட்டாங்க.. எவிக்ஷன் ஆகி புலம்பும் சச்சனா!. விஜய் சேதுபதி என்ன சொன்னார்!..
Sachana: மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா கொடுத்திருக்கும் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் 50வது திரைப்படமாக வெளியானது மகாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக சச்சனா நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்தப் புகழுடன் நேற்று தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் கலந்து கொண்டார்.
முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உள்ளே வந்த 24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன் என கூறப்பட்டது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் ஒரு போட்டியாளரை எப்படி கணிக்க முடியும்.
ரசிகர்கள் வாக்கு போடாமல் எப்படி வெளியேற்றலாம் என பல கேள்விகளுக்கு இடையே சக்சனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக புரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சச்சனா தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதிலிருந்து, நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது சுவற்றில் யாரோ மார்க்கரில் தவறாக எழுதி இருந்தார்கள்.
என்னுடைய பையில் எப்போதுமே மார்க்கர் இருக்கும் என்பதால் நான் தான் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டனர். அதனால் என்னை பிரின்ஸ்பால் அலுவலகத்தில் உட்கார வைத்தனர். என்னுடைய தந்தை கூட வந்து என் பெண்ணை ஏன் இப்படி செய்தீர்கள் என சண்டை போடவில்லை.
அவள் தப்பு செய்திருந்தாலும் இல்லை என்றாலோ நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என என்னை அவர் அசிங்கப்படுத்தினார். ஆனால் மகாராஜா திரைப்படத்தில் இதே காட்சி வேறு விதத்தில் அமைந்தது. அப்போது விஜய் சேதுபதியிடம் இதைக் குறித்து நான் கூறினேன். அவர் என்னிடம் உங்க அப்பா மன்னிப்பு கேட்டது சரிதான். மகள் வாழ்க்கை எங்கும் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் அவர் மன்னிப்பு கேட்டிருக்கலாம் என எனக்கு அறிவுரை கூறினார் என குறிப்பிட்டு இருக்கிறார்..