தளபதி 69 படத்தில் அந்த நடிகை!.. அப்ப சும்மா களை கட்டுமே!.. ரசிகர்கள் குஷி!...
விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங், பின்னணி இசை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, வெங்கட்பிரபு அதில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறாத நிலையில் சமீபத்தில் 3வது பாடல் வெளியானது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த பாடலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதோடு, டீ ஏஜிங்கில் விஜயின் முகம் மிகவும் அசிங்கமாக இருப்பதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
டீ ஏஜிங் சரியாக செய்யவில்லை எனவும், வெங்கட்பிரபு இதை மிகவும் கவனமாக செய்திருக்கலாம் எனவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. ஒருபக்கம் விஜயின் அரசியல் நடவடிக்கைகளும் சூடு பிடித்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் அரசியல் கட்சி களமிறங்கவிருக்கிறது. ஏற்கனவே கோட் படத்திற்கு பின் விஜய் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்த படத்தை வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார்.
துணிவு படத்திற்கு பின் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார் வினோத். ஆனால், ஒரு வருடம் ஆகியும் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவேதான், வேறு நடிகரை வைத்து படமெடுக்கும் முயற்சியில் வினோத் இறங்கினார். முதலில் தனுஷ் பெயர் அடிபட்டது. அதன்பின் விஜய் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இப்போது வினோத்தின் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இது விஜயின் 69வது திரைப்படமாகும். இந்நிலையில், இந்த படத்தில் பிரேமலு படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமான மமிதா பைஜு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படம் அரசியல் தொடர்பான கதை என சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றி அடுத்த அப்டேட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என சொல்லப்படுகிறது.