மணிரத்னம், கமல், ரஜினி காம்போ... நடக்குமா? இளம் இயக்குனர்களே ஆசைப்பட்ட விஷயமாம்..!

சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்தின் கூலி படம் எந்த நிலையில் உள்ளது? ரஜினி, கமல் இருவரையும் இணைத்து மணிரத்னம் படம் இயக்கப் போகிறாரா? தயாரிப்பது யார் போன்ற தகவல்களை பிரபல பத்திரிகையாளர் சபையர் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
கூலி படம் அப்டேட்: கூலி படத்துக்கு 90 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. அதைப் பற்றிய இப்போ எதுவும் ஹைப் ஏற்ற வேண்டாம். படப்பிடிப்பு முடிஞ்சி புரொமோஷன் வேலைகளும் கடகடன்னு நடக்கும். அப்புறம்தான் படத்தைப் பற்றிய அப்டேட்டுகளை வெளியிடுவாங்க. அதனால இப்போதைக்கு அந்தப் படத்தைப் பற்றி எதுவும் தகவல் வெளிவரல.
கூலி படத்தோட படப்பிடிப்பு மார்ச் மாதத்தின் கடைசியில் முடிந்துவிடும். அதன்பிறகு ஜெய்லர் 2 படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்படும். இப்போது படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
இப்போது படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் பெங்களூருவில் தயாராகி வருகிறது. ரஜனிக்கு நிறைய லைன் அப் படங்கள் இருக்கு. மாரி செல்வராஜ் லிஸ்ட்ல இருக்காரு. அது இன்னும் உறுதியாகல. ஆனா வாய்ப்புகள் இருக்கு.
பெரிய புராஜெக்ட்: மணிரத்னம் கூட சேர்ந்து பண்ணலாமான்னு ஒரு ஐடியா இருக்கு. மணிரத்னம், கமல், வேல்ஸ் நிறுவனம் பெரிய புராஜெக்ட் இருக்கு. 2 பெரிய லெஜண்டை வச்சிப் பண்ணுவோமான்னும் இருக்கு. எல்லாமே பேச்சுவார்த்தையில இருக்கு. மணிரத்னம், கமல், ரஜினி காம்போவுல வேல்ஸ் நிறுவனம் இணைந்து ஒரு பெரிய ட்ரீம் புராஜெக்ட் பண்ணலாம்னு பேச்சுவார்த்தை நடக்கு.
வேற லெவல்: அது இன்னும் உறுதியாகல. வேல்ஸ் நினைச்சா பண்ணிடுவாங்க. அதுல வேல்ஸ் ஆர்வமா இருக்காங்க. அது இந்த வருஷம் கடைசில தான் தெரியும். நாயகன்ல கமலையும், தளபதில ரஜினியையும் வேற லெவல்ல காட்டினவர் மணிரத்னம். பாலசந்தருக்குப் பிறகு இந்த இருவரையும் வைத்து படம் எடுக்கும் திறமை இவரிடம் இருக்கு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நெல்சன், லோகேஷ் என இளம் இயக்குனர்களுக்கும் கமல், ரஜினி இருவரையும் இணைத்துப் படம் எடுக்க ஆசைதான். பாரதிராஜாவும் பதினாறு வயதினிலேக்குப் பிறகு ரொம்ப முயற்சி பண்ணினார். அது முடியாமல் போச்சு.
அதுக்கு அப்புறம் பாலசந்தரும் கடைசியாக இருவரையும் இணைத்துப் படம் எடுக்க நினைத்தார். அதுக்கான வாய்ப்பு அமையவில்லை. இப்போ மணிரத்னம் பக்கம் அந்தப் பேச்சுவார்த்தை திரும்பி இருக்கு என்கிறார்கள். இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் எடுக்கும்பட்சத்தில் அது ஒரு சாதனையாகத்தான் இருக்கும்.