Connect with us

முதல்ல இது.. அப்புறம் மூனு படம்!.. என்கிட்டயும் சொன்னாரே!.. வைரல் மீம்ஸ்!…

latest news

முதல்ல இது.. அப்புறம் மூனு படம்!.. என்கிட்டயும் சொன்னாரே!.. வைரல் மீம்ஸ்!…

Vidaamuyarchi:அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை தேர்ந்தெடுத்துவிட்டால் முதலில் அவருக்கு பிடித்த மற்ற மொழி படத்தின் கதையை சொல்லி ‘இப்போது இந்த கதையை தமிழில் ரீமேக் செய்வோம். அதன்பின் உங்கள் கதையில் நடிக்கிறேன். தொடர்ந்து 3 படங்கள் நாம் இணைந்து வேலை செய்வோம்’ என சொல்வார்.

சிறுத்தை சிவா: அஜித் போன்ற பெரிய ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது முக்கியம் என்பதால் இயக்குனர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தார் அஜித். சிவாவை அவருக்கு பிடித்துப்போனது. எனவே, தொடர்ந்து 3 படம் செய்வோம் என வாக்குறுதி கொடுத்தார்.

விவேகம் தோல்வி: அடுத்து அஜித்தை வைத்து வேதாளம் படத்த இயக்கினார் சிவா. அதுவும் சூப்பர் ஹிட். அடுத்து ஒரு கிராமத்து கதையை அஜித்திடம் சொன்னார் சிவா. அதோடு, இன்னொரு கதையையும் சொன்னார். கிராமத்து கதையை விட்டுவிட்டு அந்த கதையை தேர்ந்தெடுத்தார் அஜித். அதுதான் விவேகம். அந்த படம் ரசிகர்களை ஏமாற்றியது.

அடுத்து ஹெச்.வினோத்: எனவே, சிவா முதலில் சொன்ன கிராமத்தை கதையில் அடுத்து ஒரு படத்தில் நடித்தார் அஜித். அதுதான் விஸ்வாசமாக உருவாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதன்பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்ட அஜித் அவரிடம் ஹிந்தியில் உருவான ‘பிங்க்’ என்கிற படத்தின் கதையை சொல்லி ’இதை முதலில் ரீமேக் செய்வோம். அடுத்து உங்கள் கதையில் நடிக்கிறேன்’ என சொல்ல ‘நேர்க்கொண்ட பார்வை’ உருவானது. அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை, துணிவு என இரண்டு படங்களில் அஜித் நடித்தார்.

விடாமுயற்சி மகிழ் திருமேனி: இப்போது அஜித்தின் லிஸ்ட்டில் மகிழ் திருமேனி வந்துவிட்டார். அவர் ஒரு கதையை சொல்ல அஜித்தோ ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ பட கதையை சொல்லி ‘இந்த படத்தை இப்போது செய்வோம். அடுத்து உங்கள் கதையில் நடிக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், அரசு படத்தில் சரத்குமாரிடம் வடிவேலு ‘என்கிட்டயும் சொன்னானுங்களே’ என சொல்லும் காமெடியை இதோடு ஒப்பிட்டு மீம்ஸை உருவாக்கி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top