சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்காதுடோய்!.. சிம்பு ரூட்டில் நயன்தாரா.. தயாரிப்பாளருக்கு பல்பு!..

by சிவா |
சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்காதுடோய்!.. சிம்பு ரூட்டில் நயன்தாரா.. தயாரிப்பாளருக்கு பல்பு!..
X

Nayanthara: கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து நம்பர் ஒன் நடிகையாக மாறியவர்தான் நயன்தாரா. ஐயா படம் மூலம் நடிக்க துவங்கி படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஒரு கட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். இவரின் நடிக்க ரஜினி போன்ற பெரிய நடிகர்களே ஆசைப்பட்டனர்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா வேண்டும் என ரஜினியே விரும்பி கேட்டார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் கதையின் நாயகியாக அவரே நடிக்க துவங்கினார்.

அப்படி வெளியான மாயா, அறம், நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அன்னப்பூரணி உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தில் அம்மனாக வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை சமீபத்தில் நடந்தபோது நயன்தாராவும் கலந்துகொண்டார். அப்போது அவரை பல்லாக்கில் 4 பேர் தூக்கி வருவது போல பிளான் போட்டு வைத்திருந்தாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஆனால், ‘வேண்டாம் சார். ஏற்கனவே பல முறை சிக்கி இருக்கேன்.. ஓவர் பில்டப்பா இருக்கு.. வேண்டாம்’ என நயன் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த போது சிம்புவை ஹெலிகாப்டரில் அழைத்து வர திட்டமிட்டார் ஐசரி கணேஷ். ஆனால், சிம்பு அதை மறுத்துவிட்டார். சினிமாவில் ஹீரோக்களையும், ஹீரோயினையும் குஷிப்படுத்த தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வேலைகளை செய்வார்கள். ஆனால், சிம்புவும், நயன்தாராவும் அதை மறுத்துவிட்டனர். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை சிறப்பாக நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Next Story