நயனுக்கும் தனுஷுக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்தா? நல்ல வேளை இப்பயாவது முடிச்சு விட்டாங்களே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:45  )

தென்னிந்திய சினிமாவில் ஒரு டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பிரபல திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை எதிர்பார்த்து அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில்தான் நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடந்தது. கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட் மற்றும் டோலிவுட் என எல்லா மொழி சினிமாக்களில் இருந்தும் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட நயனும் விக்னேஷ் சிவனும் அதிலிருந்து தங்கள் காதலையும் வளர்த்து வந்தார்கள்.

எங்கு போனாலும் ஒன்றாக போவது. ஒன்றாக சுற்றுவது என பல இடங்களில் இந்த ஜோடியை பார்க்க முடிந்தது. எப்படியோ ஒரு வழியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தை ரசிகர்களும் பார்க்க ஆர்வம் காட்டினார்கள். அதனால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இவர்கள் திருமண வீடியோவை வெளியிட ரைட்ஸ் வாங்கியிருந்தது.

அதுவரை திருமணம் சம்பந்தப்பட்ட எந்தவொரு புகைப்படமும் வெளியிடக் கூடாது என்ற உத்தரவாதத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இவர்கள் திருமண வீடியோவை வெளியிட தாமதித்து வந்தது. இந்த நிலையில் நயன் மற்றும் விக்கியின் திருமண வீடியோவை இயக்கியதே கௌதம் வாசுதேவ் மேனன் தான்.

ஆனால் அதில் சில ஃபுட்டேஜ் போதாது என நெட்ஃபிளிக்ஸ் கௌதமிடம் சொல்ல நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சில புட்டேஜ்களை இவர்கள் திருமண வீடியோவில் சேர்த்ததாக கூறப்படுகிறது. நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். அதனால் என்.ஓ.சி கொடுக்க முடியாது என இன்றுவரை அடம்பிடித்தாராம் தனுஷ்.

எப்படியோ ஒரு வழியாக இப்போதுதான் தனுஷ் என்.ஓ.சியை வழங்கியிருக்கிறாராம். அதனால் கூடிய சீக்கிரம் நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸில் வர வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது.

Next Story