நேரா தியேட்டர் போய் அசிங்கப்பட வேணாம்… நயன் படத்தின் திடீர் ஸ்கெட்ச்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:00  )

Nayanthara: தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வந்த நயன்தாராவிற்கு சமீப காலமாகவே திரைப்படங்கள் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. அதை சரி கட்ட அவருடைய அடுத்த படத்தில் மீண்டும் அதே முயற்சியை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தனிக் கதையில் நாயகியாக நடித்து வெற்றி கண்டவர் நடிகை நயன்தாரா. ஆனால் அவரின் போதாத காலமோ என்னவோ சமீபமாக அவர் நடிப்பில் தொடர்ச்சியாக 12க்கும் அதிகமான திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே தழுவியது. அட்லீயின் ஜவான் திரைப்படம் மட்டுமே நயனின் வெற்றி படங்கமாக இருக்கிறது.

இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நயன்தாராவை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். இதனால் தற்போது நயன் ராகவா லாரன்ஸ், சசிகுமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடி போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் தி டெஸ்ட் திரைப்படத்தில் நயன் நடித்து வருகிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், சித்தார்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர்.

புதுமுகமாக சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில் இந்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியிட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் தோல்விக்கு பின்னர் மூன்றாம் பாகத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய தோல்வியை விநியோகஸ்தர்கள் பெரும் நிலையில் ஓடிடி ரிலீஸை தயாரிப்பாளர் குறி வைத்து இருக்கிறார். ஆனால் இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2, கவின் உடன் ஒரு படத்தில் ஜோடியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story