Oviya: ரியல் லைப்ல சரக்கு பாட்டில்... ரீல் லைப்ல சூலாயுதமா!... அதுவும் கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாமே?...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:25  )

தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு வாய்ப்பு குறைய பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உருவானது.

மனதில் பட்டதை செய்து கொண்டு யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் விளையாடி வந்தார். இவர் தான் டைட்டில் வின்னர் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் பிரச்சினை காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அவராகவே வெளியேறி விட்டார். இருப்பினும் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்று தொடங்கி ஏகப்பட்ட சப்போர்ட் கொடுத்து வந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிரபலமாவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. களவாணி 2, 90 எம் எல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு பெரிய அளவு என்ற திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஓவியா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவார். அதிலும் சமீப காலமாக கையில் சரக்கு பாட்டிலுடன் தான் அம்மணி வலம் வருகின்றார். அதிலும் நடிகை ஓவியா தனது காதலருடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கானது.

ஆனால் இதை பார்த்து ஓவியா அதற்கு மறுப்பு சொல்லாமல் என்ஜாய் பண்ணுங்க என்று போட்ட கமெண்ட் அதைவிட ட்ரெண்டானது. பின்னர் இது தொடர்பாக கேரளாவில் ஓவியா புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பாங்காகில் பப்பு, சரக்கு, டான்ஸ் என்று உல்லாசமாக இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று யாரும் எதிர்பாக்காத வகையில் அம்மன் வேடத்தில் நடிகை ஓவியா புகைப்படம் வெளியானதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இருக்கிறார்கள்.

காளியம்மன் போல் பல கைகளுடன் கையில் சூலாயுதத்துடன் ஓவியா இருக்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். அதுவும் கிரிக்கெட் வீரரான ஹர்பன்சன்சிங் உடன் நடிகை ஓவியா ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்புதான் வெளியாகி இருக்கின்றது. அந்த படத்திற்கு சர்வேவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஜிபி முத்து, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் இணைந்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜான் பால்ராஜ் இயக்கி வருகின்றார். ஹர்பஜன் சிங் இப்படத்தில் ஒரு டாக்டராக நடிக்கின்றார். மேலும் நடிகை ஓவியா தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அம்மன் கெட்டப்பில் களம் இறங்கி இருக்கின்றார்.

Next Story