பார்த்திபன் பல வருஷம் முன்னாடியே பார்த்தும்!… லப்பர் பந்து சுவாசிகாவின் பெருமூச்சு!..

Published on: August 8, 2025
---Advertisement---

லப்பர் பந்து படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்வாசிகா தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னிடம் 13 வருடத்திற்கு முன்னதாகவே ஆடிஷனுக்கு வந்துள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த நடிகை ஸ்வாசிகா தமிழில் வைகை படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து கோரிப்பாளையம், சாட்டை, மைதானம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். மலையாளத்திலும் சினிமா கம்பெனி படம் மூலம் அறிமுகமாகி வசந்தி, குமாரி, சதுரம், இஸ்க் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

லப்பர் பந்து படத்தில் அவரின் நடிப்பை பார்த்த இயக்குனர்கள் பலரும் அவரது கால்ஷிட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், ஸ்வாசிகா நடிகர் சூரியுடன் நடித்து வெளியான மாமன் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து ரெட்ரோ, சூர்யா 45 என படு பிஸியாக நடித்து வருகிறார்.

ஸ்வாசிகாவின் வளர்ச்சியை பார்த்த நடிகர் பார்த்திபன் 13 வருடங்களுக்கு முன்பு ஸ்வாசிகா என்னை வந்து சந்தித்தார், நான் அவரை ஆடிஷன் பண்ணிட்டு வாய்ப்பு வந்தா சொல்றேன் என்று சொன்னேன். பின்பு லப்பர் பந்து படத்தை பார்த்துட்டு அவரை நேரில் சென்று வாழ்த்திய போது, அவங்க சார் என்னை தெரியலயா ஆடிஷன் அப்போ நீங்க எனக்கு சொல்லி கொடுத்த டயலாக் கூட இன்னும் எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்னதும் பழசை சிந்தித்து சிரித்தேன்.

தன்னை சந்தித்து பிறகு 13 வருடங்களாக போராடி கொஞ்சம் கூட தளர்ச்சி அடையாமல் இன்று இந்த நிலையில் உள்ளார். மேலும், பெண்களுக்கு 25 வயதுக்கு மேல் ஆனாலே அவர்கள் மனதில் ஒரு வகையான பயம் ஏற்படும். ஆனால் அதல்லாம் ஒரு காரணமாக கருதாமல் சரியான ரோல் கிடைக்கும் போது தன் திறமையை வெளிப்படுத்தி இந்த அளவிற்கு வளர்ர்சியடைத்துள்ளார் ஸ்வாசிகா அவர் மேலும், பல லப்பர் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிடுவார் என பாராட்டியுள்ளார் பார்த்திபன்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment