பார்த்திபன் காதலில் நடந்த அதிசயம்... அவரே சொல்லிட்டாரே... இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:29  )

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பார்த்திபன் சினிமாவில் ஒரு வித்தகர் என்று சொன்னால் மிகையில்லை. கவிதை கூட அழகாக எழுதுவார். அவரது 'கிறுக்கல்கள்' தொகுப்பைப் படித்தாலே தெரிந்து விடும். அவரது படங்களைப் பார்த்தாலே தெரியும். புதியபாதை என்ற தனது முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்தவர். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சீதா. அவரையை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

அவரது முதல் காதல் எப்படிப்பட்டது? யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது என்ற தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

இந்தக் காதலை முதலில் சொன்னது யாருன்னு நானே கேட்டுருக்கேன். 'அவங்க தான்' சொன்னாரு. இதுபற்றி சீதா கேட்கும்போது 'என்னங்க எந்தப் பேட்டியில கேட்டாலும் முதல்ல காதலிச்சது அவங்க தான்னு சொல்றீங்க. இது நல்லாருக்கா... இதைப் பத்தி ஏதாவது பேசமாட்டாங்களா'ன்னு கேட்டாராம். அதுக்கு பார்த்திபன் சொன்னது தான் செம மாஸ்.

'நீங்க வந்து அன்னைக்கு நான் காதலிக்கறதுக்கு முன்னாடியே பிரபலமா இருந்த நடிகை. உங்களைக் காதலிக்கிறதுக்கு பத்து இருபது பேரு இருந்துருப்பாங்க. அப்படி இருக்கும்போது நீங்க ஒருத்தரைக் கல்யாணம் பண்ணனும்னா நீங்க காதலிச்சா தானே முடியும்? அப்படி இருக்கும்போது யாரு காதலிக்கறதா சொல்லணும்? அதனால தான் நீங்க காதலிச்சதா சொன்னேன்'னு சொன்னாரு பார்த்திபன்.

அதே மாதிரி அந்த விஷயத்தைப் பத்தி வெளிப்படையா பகிர்ந்து கொண்டார். 'புதிய பாதையில் நடிக்கும்போது நான் சாதாரண ஆளு. அப்படி இருக்கும்போது நான் ஆணழகனும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி அவங்களைக் காதலிக்க முடியும்? நான் காதலிக்கிறேன்னு அவங்களுக்கு எங்கேயோ தெரிஞ்சிருக்கு.

அதனால தான் அவங்களுக்கும் என் மேல ஈர்ப்பு வந்துருக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அப்படி அமைந்த அதிசயம் தான் அது'ன்னு அந்தப் பேட்டியில எங்கிட்ட சொன்னார் பார்த்திபன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story