Categories: latest news

இதோட எல்லாம் முடிஞ்சிது… ஜனநாயகன் படம் குறித்து அதிர்ச்சி கொடுத்த முக்கிய நடிகை!

Jananayagan: கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகி இருக்கும் ஜனநாயகன் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை ஒரு வருடத்திற்கு முன்னர் அறிவித்தார். அந்த அறிக்கையிலேயே தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் அவரின் 69வது படமான ஜனநாயகம்தான் விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் பிரபலங்களும் ரசிகர்களும் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வந்தாலும் தற்போது வரை விஜய் தரப்பிலிருந்து அதற்கான எந்த ஒரு தகவலும் வெளியானது.

பல முன்னணி இயக்குனர்கள் 69வது திரைப்படம் இயக்க விஜயிடம் கதை சொல்லி வந்தனர். இந்த பட்டியலில் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம், தமிழில் முன்னணிய இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், அட்லீ, நடிகரும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூட இருந்தனர்.

ஆனால் பெரிய போட்டிக்கு இடையில் விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஹெச்.வினோத் பெற்றார். இப்படத்தை முன்னணி நிறுவனமான கே வி என் தயாரித்து வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் ஆக இப்படம் அமையும் என தகவல்கள் கசிந்தாலும் இதுவரை படக்குழு அது குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். ஆனால் இது விஜயின் அரசியல் வாழ்க்கையின் எண்ட்ரி சமயத்தில் வெளியாகும் திரைப்படம் என்பதால் அரசியல் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வரும் 21ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இன்றுடன் என்னுடைய ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago