விஜய்க்கு கூடிய கூட்டம்... கண் தெரியாதவங்க தான் மறுப்பாங்க..! சீமானுக்குப் பதிலடி கொடுத்த பிரபலம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:21  )

விக்கிரவாண்டி மாநாட்டில் விஜயின் பேச்சும், அங்கு கூடிய கூட்டமும், சீமானின் எதிர்ப்பும் தான் இப்போது ஊடகங்களில் மீம்ஸ்கள், கார்டுகள் என வைரலாகி வருகிறது. இதுபற்றி பிரபல அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே என்ன சொல்றாருன்னு பாருங்க.

தமிழ் தேசியத்தை அழிக்க வந்தது திராவிடம். தமிழ் தேசியத்துக்கு மேல போர்த்தப்பட்ட போர்வை திராவிடம். அது இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கொள்கை வெளியே வராது என்பது சீமானின் கொள்கை. அவரைப் பொருத்தவரை தமிழ்த்தேசியமும், திராவிடமும் வேறு என்கிறார். விஜய் இரண்டும் இரண்டு கண்கள் என்றும் அதுதான் தனது கொள்கைன்னும் சொல்றாரு.

இப்படி ஒரு கொள்கையை நான் கேள்விப்பட்டதே இல்லையே என்கிறார் சீமான். அவரைப் பொருத்தவரை இப்போ வரை விஜயைத் தம்பின்னு தான் சொல்றாரு. ஆனா கொள்கையில தான் உடன்படவில்லை. அதுல தெளிவா இருக்காரு.

விஜய் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி பண்ணுவாரு. 2 கோடி தொண்டர்கள்னு அதிமுகல சொல்லிக்கிட்டு இருந்தாங்க. விழுந்ததே ஒரு கோடி ஓட்டு தான். அப்படின்னா அவங்க தொண்டர்களே அவங்களுக்கு ஓட்டுப் போடலையான்னு கேள்வி வரும். அவங்களுக்கே அந்தக் கதி. திமுகல ஒரு தடவை தவிர இதுவரைக்கும் அவங்க தனித்துப் போட்டியிட்டதே கிடையாது. இவங்க எல்லாம் கூட்டணியை நம்பித் தான் இருக்காங்க.

சீமானுக்கு ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. நான் தேர்தல்ல ஜெயிக்க வந்தவன் கிடையாது. மாற்ற வந்தவன்னு சொல்றாரு. அவரால அடுத்த தேர்தல் வரை வெயிட் பண்ண முடியுது. ஆனா விஜய் அப்படி இருக்க முடியாது. நாங்க தனிச்சிப் போட்டியிட்டு ஜெயிப்போம்னு நினைக்கிறோம். இல்ல கூட்டணிக்கும் ரெடி. அப்படி வர்றவங்களுக்கு ஆட்சி அதிகாரத்துலயும் பங்குன்னு சொல்றாரு.

இவ்ளோ பெரிய ஆஃபர் கொடுத்ததே கூட்டணி அமைக்கத் தானே. விஜய் திமுக கூட்டணில தான் தனக்கான மீன் பிடிக்க முடியும். அதனால தான் திருமாவளவனுக்குப் பதில் சொல்றாரு. ஒரு கட்சி இன்னொரு கூட்டணிக்கு மாறும்னு இருந்தா அது விசிகவை நோக்கித்தான் எல்லாருடைய பார்வையும் போகும்.

ஏன்னா அவருக்குத் தான் இன்னைக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. அவரு தான் நிறைய பேர் வேணும்னு நினைக்கிறாரு. அவர் வந்தா பட்டியலின சமூகத்தையே தன் பக்கம் கொண்டு வந்துடலாம் என்ற பிம்பம் வரும். அதனால தான் எல்லாரது கவனமும் அவரு பக்கம் இருக்குது. திருமாவளவன் என்ன சொல்றாருன்னா தம்பி விஜய் மறைமுகமாகப் பேச வேண்டிய மேட்டரை எல்லாம் பப்ளிக்கா பேசுறாரேன்னு தான் கவலையா இருக்கு.

விஜய்க்கு வந்த கூட்டம் எல்லாம் ஓட்டா மாறிடுமான்னு சொல்றாங்க. ஆனா அதுதானே அடையாளம். அதை வச்சித்தானே மற்ற கட்சிகளைத் தீர்மானிக்கிறாங்க. இதே நேரம் விஜய்க்கு குறையா கூட்டம் இருந்துச்சுன்னா அவருக்கு வந்ததே கொஞ்ச பேரு தான்.

அவருக்கு எப்படி ஓட்டு கிடைக்கும்னு சொல்வாங்க. அவரைப் பாராட்டுவீங்களா? அன்னைக்கு கூட்டமே இல்ல. ஈயாடுச்சுன்னு சொல்வீங்க இல்ல. அப்படின்னா கூட்டம் வந்தா பாராட்டணும் இல்ல. விஜய்க்கு வந்ததெல்லாம் சரியான கூட்டம் என்பதை மறுக்க முடியாது. மறுப்பவர்கள் கண்தெரியாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடிகை நயன்தாராவுக்குக் கூட ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு வரும்போது 4 லட்சம் பேர் கூடினாங்க. விஜயகாந்துக்குக் கூடாத கூட்டமா? அது ஒரு நடிகையைப் பார்க்க வந்த கூட்டம். அதே மாதிரி தான் விஜய்க்கும். அதெல்லாம் ஓட்டா மாறிடுமான்னு எல்லாம் சீமான் உள்பட பலரும் விமர்சனம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story