சிவாஜி வீடு ஜப்தி: வெளியில வந்தது ஒரு ஆர்டர்தான்... இன்னும் லிஸ்ட்ல இவ்ளோ பேரு வெயிட்டிங்!

by sankaran v |
சிவாஜி வீடு ஜப்தி: வெளியில வந்தது ஒரு ஆர்டர்தான்... இன்னும் லிஸ்ட்ல இவ்ளோ பேரு வெயிட்டிங்!
X

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் கோர்ட் ஜப்தி செய்ய உத்தரவு என வந்த செய்தி மீடியாக்களில் பற்றி எரிகிறது. எங்கு பார்த்தாலும் இதே பேச்சு தான். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

விஷ்ணு விஷால் படம்: ஜகஜாலக் கில்லாடி அந்தப் படம்தான் பிரச்சனை. விஷ்ணு விஷால் ஹீரோ. நிவேதா பெத்துராஜ் ஹீரோயின். எழில் இயக்கினார். விஷ்ணு விஷாலுக்கு மார்க்கெட் இல்லாத போது ஆரம்பிக்கப்பட்ட படம். துஷ்யந்த்தும் அவரது மனைவியும் ஈசன் சினிமாஸ்ல பார்ட்னர்ஸ். அந்த நிறுவனம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இந்த ஜகஜாலக் கில்லாடி.

இந்தப் படத்துக்காக மூன்றரை கோடி தான் மொத்த பட்ஜெட். ஆனா அவங்க 13.5கோடி ரூபாய் கடன் வாங்குறாங்க. தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற ஒரு பைனான்சியரிடம் 3 கோடியே 74 லட்சம் 75 ஆயிரம் வாங்கி இருக்காங்க. அது வட்டியோட ஒன்பதரை கோடி ரூபாய் கட்ட சொல்லி கோர்ட் ஆர்டர் போட்டுருக்கு.

கோர்ட் ஆர்டர்: அந்த ஆர்டர்படி பணம் கட்டலன்னா அன்னை இல்லத்தை ஜப்தி பண்ணிக்கலாம்னு சொல்லித்தான் அந்த ஆர்டர் வந்துருக்கு. அவர் மட்டும் இந்தப் படத்துக்குக் கடன் கொடுக்கல. அவரு மட்டும் கோர்ட் ஆர்டரை வாங்கல. இன்னும் சில முக்கியமானவர்கள் வாங்கி வச்சிருக்காங்க. அதுல ஒருவர் பங்கஜ் மேத்தா என்ற பைனான்சியர். அவர் நெகடிவ் பைனான்ஸ் போடுவாரு.

மீன்குழம்பும் மண்பானையும்: இவரு 25 வருஷத்துக்கும் மேலாக சினிமாவுல பைனான்சியரா இருக்காரு. ரெட் கார்ப்பரேட் ரமேஷ் என்பவரும் கடன் கொடுத்துருக்காரு. அவரு மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்துக்கு 3 கோடி ரூபாய் பைனான்ஸ் பண்ணிருந்தாரு. இதே நிறுவனம் தான் அந்தப் படம் எடுத்தது.

பெரிய தொகை: அவருக்குக் கொடுக்க வேண்டிய ரூபாயும் கொடுக்கல. அவரு இந்தப் படத்துக்கும் 1 கோடி ரூபாய் கொடுத்துருக்காரு. மொத்தம் 4 கோடி அவருக்குக் கொடுக்கணும். அதே மாதிரி ஜஸ்வந்த் பண்டாரி பைனான்சியர் பெரிய தொகையைக் கொடுத்துருக்காரு. ராகேஷ் செரீஸ் என்ற பைனான்சியரும் 4 கோடி கொடுத்துட்டு ஜப்தி பண்ண ஆர்டரோட இருக்காரு.

நாலரை கோடி: ராம்குமார் மகனின் பெயரில் படங்கள் தயாரிக்கும்போது பல கடன்கள் ஏற்படுது. அதுல வரும் சிக்கல்களுக்கு இந்தப் பணத்தை வாங்கி அடைக்கிறாரு. இந்தப் படத்தின் வியாபாரம் அதிகபட்சம் என்னன்னா மூன்றரை கோடி போட்டுருக்கு. நாலரை கோடிக்கு மேல வியாபாரம் பண்ண முடியாது.

விஷ்ணுவிஷாலுக்கு அவ்ளோதான் மார்க்கெட். எழில் இயக்குனர். இதுவே 13.5கோடி கடனா போனா மீதி கடனை எல்லாம் எப்படி அடைக்கிறது? இந்தப் பிரச்சனையை எப்படி தீர்க்கப் போறாங்கன்னு தெரியல என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story