12 கோடி ஆட்டய போட்டார்!.. புது படங்களுக்கு செக்!.. விஷாலுக்கு எதிராக களமிறங்கிய திரையுலகம்!..
அப்பா பிரபல தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்தவர்தான் விஷால். சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் ஆசையெல்லாம் கோலிவுட் மீதுதான். துவக்கத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சில படங்களில் வேலை செய்தார். அதன்பின் நடிக்கும் ஆசை வந்தது.
செல்லமே படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், திமிறு திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரலப்படுத்தியது. சண்டக்கோழி படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அதன்பின் கடந்த பல வருடங்களாக பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார்.
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்தார் ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் மாறினார். நடிகர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு முக்கிய பதவியில் அமர்ந்தார். ஆனால், ஏற்கனவே தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களில் பதவியில் இருந்தவர்கள் விஷாலுடன் ஒத்துழைக்கவில்லை.
அவர்கள் விஷால் மீது பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தனர். ஆனால், விஷால் எதையும் கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால், நடக்கவில்லை. சரத்குமார், ராதாரவிக்கு எதிராக பல கருத்துக்களையும் சொன்னார். விஷாலுக்கு எதிராக ஒரு பெரும் கூட்டமே வேலை செய்தது.
தயாரிப்பாளர் சங்க பணத்தை விஷால் முறைகேடு செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது. விஷாலும் நீதிமன்றத்தை அணுகினார். நடிகர் சங்க தேர்தல் நடந்து சில வருடங்கள் ஆகியும் இப்போது வரை முடிவு அறிவிக்கப்படவில்லை. ஒருபக்கம், வெற்றி படங்களை கொடுக்க விஷால் போராடி வருகிறார். பல வருடங்களுக்கு பின் மார்க் ஆண்டனி ஓடியது. ஆனால், கடைசியாக வெளியான ரத்னம் படம் ஓடவில்லை.
இந்நிலையில், 2017 - 19வரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் இருந்தபோது முறைகேடாக ரூ.12 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆலோசித்த பின்னரே படத்தை துவங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.