கங்குவாக்கு சொன்னதெல்லாம் புஷ்பா 2-க்கு நடக்குதே!.. வெளிநாட்டிலும் செம கலெக்ஷன் போலயே!..

by ramya suresh |
கங்குவாக்கு சொன்னதெல்லாம் புஷ்பா 2-க்கு நடக்குதே!.. வெளிநாட்டிலும் செம கலெக்ஷன் போலயே!..
X

புஷ்பா 2 திரைப்படம்:

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த 3 வருடங்களாக இப்படத்தின் இரண்டாவது பாகத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகியிருக்கின்றது. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகின்றது.

படத்தின் வசூல்:

புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. படம் உலக அளவில் முதல் நாளில் 294 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது படம் திரைக்கு வந்த 4 நாட்களில் உலக அளவில் 750 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

4 நாட்களில் மட்டுமல்ல இதுவரை அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கின்ற பெருமையை புஷ்பா 2 திரைப்படம் விரைவில் பெறும் என்பதில் இந்த சந்தேகமும் இல்லை. புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கை காட்டிலும் ஹிந்தி மொழியில் சக்க போடு போட்டு வருகின்றது. நேற்று இந்த திரைப்படம் இந்தியில் மட்டும் 85 கோடி வசூல் செய்துள்ளது.

ஹிந்தியில் புஷ்பா 2 திரைப்படம் நடத்தி வரும் வசூல் வேட்டை அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. நேற்று தெலுங்கில் இந்த திரைப்படம் 44 கோடி வசூலையும், தமிழில் 9.5 கோடி ரூபாய் வசூலையும், மலையாளத்தில் ரூ. 1.9 கோடியும், கன்னடத்தில் ரூ. 1.1 கோடியும் வசூல் செய்துள்ளது.

புஷ்பா 2 திரைப்படம் இதுவரை இந்தியில் மட்டுமே ரூ. 285. 7 கோடியும், தெலுங்கில் ரூ. 198.55 கோடியும், தமிழில் ரூ. 31.1 கோடியும், மலையாளத்தில் ரூ. 10.55 கோடியும், கன்னடத்தில் ரூ. 3.55 கோடியும் வசூல் செய்து இருக்கின்றது. இதனைத் தாண்டி வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பி வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். அதன்படி வெளிநாடுகளில் 19.25 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நான்கு நாட்களில் மட்டும் புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 750 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.

விரைவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. கங்குவா திரைப்படம் தான் 1000 கோடி வசூல் செய்யும் என்றெல்லாம் பில்டப் கொடுத்து வந்த நிலையில் அதனை தற்போது புஷ்பா 2 திரைப்படம் சிறப்பாக செய்து வருகின்றது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story