ஹீரோ - இயக்குனர் ஈகோவால் தடுமாறும் புஷ்பா 2.. இந்த பஞ்சாயத்து எப்ப முடியுமோ?!...

by ராம் சுதன் |

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஆந்திராவில் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. ஆனால், இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜூனை பேன் இண்டியா நடிகராக மாற்றி இருக்கிறது.

ஏனெனில் புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆந்திராவில் உள்ள காடுகளில் செம்மரக்கட்டை கடத்தும் மக்கள். அவர்களின் பின்னணி, அந்த தொழிலில் உள்ள போட்டிகள், சூழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தார் இப்படத்தின் இயக்குனார் சுகுமார்.

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், சமந்தா ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார். இந்த படத்திற்கு ஸ்ரீ தேவி பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றி ராஷ்மிகாவையும் பேன் இண்டியாக நடிகையாக மாற்றியது. இப்போது ராஷ்மிகா ஹிந்தி படங்களில் நடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.

புஷ்பா திரைப்படம் ஹிட் என்பதால் அதன் இரண்டாம் பாகத்தை இப்போது எடுத்து வருகிறார்கள். இந்த படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகாவே நடித்து வருகிறார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் இறுதியில் பஹத் பாசில் வில்லனாக வருவார்.

எனவே, 2ம் பாகத்தில் அவர் முக்கிய வில்லனாக இருப்பார் என கருதப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே துவங்கியது. இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. ஆகஸ்டு 15 என அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 6ம் தேதி என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூனுக்கும், இயக்குனர் சுகுமாருக்கும் இடையே ஈகோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பு நடக்காமல் இழுத்துகொண்டே போகிறது. சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுக்கும், சுகுமாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு அல்லு அர்ஜூன் கிளம்பி சென்றுவிட்டார். அதன்பின் இயக்குனரும் பேக் அப் சொல்லிவிட்டு போய்விட்டாராம். இப்போது இருவரையும் சமாதனப்படுத்தும் முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டிருக்கிறாராம்.

இப்படியே போனால் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story