2024 வருடத்திலேயே அதிக வசூல்!.. கோடிகளை கொட்டும் ராயன்!.. தனுஷே இனிமே கையில பிடிக்க முடியாது!..
Raayan: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள திரைப்படம்தான் ராயன். வட சென்னை, அசுரன் பட பாணியில் ஒரு சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லராக இப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷின் தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷனும், தங்கையாக துஷரா விஜயனும் நடித்திருந்தனர்.
சிறுவனாக இருக்கும்போதே ஊரில் ஒரு கொலையை செய்துவிட்டு சென்னை வந்து செட்டில் ஆகிறார் தனுஷ். சிறு வயது முதலே தம்பிகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார் தனுஷ். வட சென்னை பகுதியில் ஒரு பாஸ்ட் புட் கடையை துவங்கி தம்பிகளுடன் அந்த கடையை நடத்தி வருகிறார்.
ஒருபக்கம், அந்த பகுதியில் எஸ்.ஜே.சூர்யா, சரவணன் என இருவரின் தலைமையிலும் கேங்ஸ்டர் கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தனுஷை கொல்ல முயற்சி செய்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது? தனுஷின் தம்பிகள் என்ன செய்கிறார்கள்?.. தனுஷின் தங்கைக்கு என்ன ஆகிறது என்பதுதான் திரைக்கதை.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் லாஜிக் இல்லை, ஓவர் பில்டப், பாட்ஷா கதையை சுட்டு தனுஷ் எடுத்திருக்கிறார் என்றெல்லாம் சொன்னர்கள். ஆனால், இது படத்தின் வசூலை பாதிக்கவில்லை.
அட்வான்ஸ் புக்கிங் அதிகரித்துக்கொண்டே போனது. முதல் நாளே இப்படம் நல்ல வசூலை பெற்றது. எனவே, தனுஷ் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பார்ட்டியும் கொடுத்தார். படம் வெளியாகி 6 நாட்களில் இப்படம் 105 கோடி வரை வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.
படம் வெளியாகி 8 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 2024ம் வருடத்தில் வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த படமாக ராயன் சாதனை படைத்திருக்கிறது. மேலும், தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படமும் ராயன்தான் என சொல்லப்படுகிறது.