ராயன் எப்படி இருக்கு?... வெளியான முதல் விமர்சனம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய 50-வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அவருடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், வரலட்சுமி, எஸ்.ஜே.சூர்யா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கலாநிதி மாறன் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ஜூலை 26 படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தநிலையில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் சமீபத்தில் வெளியானது.
அதன்படி இப்படத்திற்கு ஏ சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டு உள்ளது. படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இருப்பதால் சில காட்சிகளை கட் செய்தால் யூ/ஏ சான்றிதழ் வழங்குகிறோம் என தணிக்கை குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அதெல்லாம் வேண்டாம் என கறாராக மறுத்து விட்டாராம். வில்லனால் தன்னுடைய குடும்ப உறுப்பினரை இழக்கும் தனுஷ் அதற்கு ரத்தம் தெறிக்க, தெறிக்க பழி வாங்குவது தான் படத்தின் கதையாம்.
இந்தநிலையில் இப்படத்தை பார்த்த கலாநிதி மாறன் படம் மிகவும் நன்றாக வந்திருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதனால் தான் ஏ சான்றிதழ் உடனே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Tags
- dhanush raayan