Connect with us

தக் லைப் ரிசல்ட்!.. மணிரத்னத்தை கழட்டிவிட்ட சிம்பு, ரஜினி!.. ஐயோ பாவம்!…

latest news

தக் லைப் ரிசல்ட்!.. மணிரத்னத்தை கழட்டிவிட்ட சிம்பு, ரஜினி!.. ஐயோ பாவம்!…

Manirathnam: இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். தமிழில் வழக்கமான கிரின்ச் கதைகள் வந்துகொண்டிருந்த போது புதுவிதமான சினிமாவை ரசிகர்களுக்கு காட்டி நம்பிக்கை கொடுத்தவர் இவர். எல்லா இயக்குனர்களுமே நாடக பாணியில் வசனங்கள் மூலமே கதை சொல்லிக்கொண்டே விஸ்வலாக மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தியவர் இவர். அதனால்தான் இவரின் படங்களுக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

மௌன ராகம், அஞ்சலி, ரோஜா, பம்பாய், தளபதி, நாயகன், அலைபாயுதே என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை கொடுத்தார். இவர் கூப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கூட உடனே கால்ஷீட் கொடுப்பார். உயிரே, குரு, இராவணன் போன்ற படங்களை இந்தியிலும் எடுத்திருக்கிறார்.

இவரின் படங்களில் தேவையில்லாத காட்சிகள் எதுவுமில்லாமல் படத்திற்கு தேவையான அதேசமயம் நறுக்கென வசனங்கள் இடம் பெற்றிருக்கும். இவர் படங்களில் நடிகர்கள் குறைவான சம்பளத்தில் கூட நடிப்பார்கள். ஏனெனில், மணிரத்னம் படத்தில் நடிக்கிறோம் என்பதே அவர்களுக்கு கவுரமாக கருதுகிறார்கள். அதனால்தான் மற்ற இயக்குனர்களிடம் வாலாட்டும் சிம்பு கூட மணிரத்னம் படத்தில் வாலை சுருட்டிக்கொண்டு நடிக்கிறார்.

மணிரத்னமும், கமலும் நாயகன் படத்திற்கு பின் 37 வருடங்களுக்கு பின் தக் லைப் படத்தில் இணைந்தார்கள். எனவே, நாயகன் போல ஒரு படம் என நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள். ஆனால், படத்தின் கதை, திரைக்கதையோடு ரசிகர்களால் ஒன்ற முடியவில்லை. அதோடு, கதாபாத்திரங்களின் தன்மையிலும் அழுத்தம் இல்லை என்பதால் தக் லைப் படம் ரசிகர்களை கவரவில்லை.

சினிமா உலகை பொறுத்தவரை ஒருவரின் இமேஜ் என்பது இன்று என்னவோ அதுதான். அவரின் பழைய வெற்றியை எல்லாம் பார்க்கமாட்டார்கள். தக் லைப் படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் சிம்புவை வைத்து மணிரத்னம் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், தக் லைப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதால் அது நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ரஜினியும் ஆர்வம் காட்டினார். அது பேச்சுவார்த்தையில் இருந்தது. ஆனால், இனிமேல் ரஜினியும் அதில் ஆர்வம் காட்டமாட்டார் என்கிறார்கள். எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி புதுமுக நடிகர்களை வைத்து ஒரு படத்தை மணிரத்னம் இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top