வேட்டையன் ஓடும் தியேட்டரில் காக்காவை கட்டி தொங்கவிட்ட ரசிகர்கள்!.. ரொம்ப ஓவரா போறீங்கடா!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:08  )

Vettaiyan: ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்டையன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் என்றாலும் சில தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை எந்த ரஜினி படத்திற்கு இவ்வளவு வரவேற்பை பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்த படத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலமே பல தியேட்டர்களில் ஞாயிறு வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டது. வெளிநாடுகளிலும் அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழகத்தில் பல நாட்களுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த படத்திற்கு பெரிய புரமோஷன் செய்யப்படவில்லை.

ஏனெனில், லைக்கா நிறுவனம் ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இந்தியன் 2 படம் ஓடவில்லை. எனவே, வேட்டையன் படத்தைத்தான் அந்நிறுவனம் நம்பி இருக்கிறது. இன்று வேட்டையன் படம் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

பேனர், கட் அவுட், பட்டாசு, மேள் தாளம் என பல தியேட்டர்களும் களை கட்டியிருக்கிறது. இந்நிலையில், கோயம்பேட்டியில் உள்ள ஒரு தியேட்டரில் காக்காவை கட்டி மேலே தொங்கவிட்டிருக்கிறார்கள். ஜெயிலர் பட விழாவில் பேசும்போது ‘காக்கா எவ்வளவு பறந்தாலும் பருந்தாக முடியாது’ என பேசியிருந்தார் ரஜினி.

இதை விஜயை சொன்னதாகவே பலரும் நினைத்தனர். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில்தான், கோயம்பேட்டில் இப்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். அவர்கள் விஜயை சீண்டவே இப்படி செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

அல்லது, வேட்டையன் படத்தில் ‘குறி வச்சா இரை விழணும்’ என வசனம் பேசியிருக்கிறார் ரஜினி. அதன் குறியீடாக காக்காவை காட்டி தொங்க விட்டிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

Next Story