ரஜினிக்கு இப்போ ஓய்வு அவசியமா? படம் நடிக்கலாமா? மருத்துவர் சொன்ன அந்தத் தகவல்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:57  )

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்தார். தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாததுக்குக் காரணம் லோகேஷ் தான் என்று பரவலாகப் பேசப்பட்டது. சாதாரணமாக அவர் ஏற்கனவே சிகிச்சை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டது தான். எங்களிடம் 40 நாளைக்கு முன்பே இதுபற்றி சொல்லிவிட்டார்.

அதற்கேற்ப நாங்களும் ஷெடுல் போட்டு சூட்டிங் எடுத்து முடித்துவிட்டோம். நாங்கள் அவருக்கு எந்த அசவுகரியத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் யூடியூபர்கள் என்னென்னமோ வதந்திகளைக் கிளப்புறது வேதனையாக இருக்கிறது என்றும் கூலி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

ரஜினியின் தீவிரமான ரசிகர்கள் சிலர் அவர் தனது உடலைப் பேணிக்காத்து இனிமே சினிமாவில இருந்து விடைபெறுவது நல்லதுன்னு நினைக்கிறதாகவும் சொல்றாங்க. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடமும் கேட்கிறாங்க. அதுக்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ரஜினியோட தீவிரமான ரசிகர்கள் சிலர் இப்படி ஒரு எண்ணம் வைத்திருப்பது எனக்கும் தெரியும். இதுபற்றி பிரபல மருத்துவர் சுதா சேஷையன்கிட்ட ஒருமுறை கேட்டேன்.

அதுக்கு அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரைக்கும் திரைப்படங்களிலே நடிப்பது கூட அவருக்கு உற்சாகம் தருவதாக அமையலாம்னு சொன்னார். நம்மைப் பொருத்தவரைக்கும் அவருக்கு எது உற்சாகம் தருதோ அதையே தொடர்ந்து செய்யட்டும்னு தானே நீங்களும், நானும் விரும்பறோம்னு சொல்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலக வாழ்வில் அடியெடுத்து வைத்து பொன்விழா ஆண்டை நெருங்கப் போகிறார். 73வயதிலும் சுறுசுறுப்பாகவும், அதே இளமைத் துடிப்புடனும் படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி இருக்க அவருக்கு உடலில் சின்ன பிரச்சனை என்றாலும் ரசிகர்கள் துடித்துப்போய் விடுகிறார்கள். அவருக்காக எத்தனை வேண்டுதல்கள் செய்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. அதனால் அவர் தங்கள் தலைவர் படம் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. நல்லா ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஏதுமில்லை.

Next Story