33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் மணிரத்னம்... அறிவிப்பு எப்போ தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தை 33 ஆண்டுகளுக்கு முன் 1991ல் மணிரத்னம் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் ரஜினியுடன் இணைந்து நடித்து இருந்தார். படத்தின் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா. பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்.
அடி ராக்கம்மா கையத்தட்டு, காட்டுக்குயிலு, யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால், புத்தம் புது பூ, சின்னத் தாயவள், மார்கழி தான் ஆகிய பாடல்கள் உள்ளன. எல்லா பாடல்களையும் எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. படத்தில் ரஜினியுடன் இணைந்து அரவிந்தசாமியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஷோபனா, பானுப்பிரியா, அம்ரிஷ்பூரி ஆகியோரும் நடித்துள்ளனர். ரஜினி, மம்முட்டி காம்போ படத்தில் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்து இருப்பர்கள்.
மணிரத்னம் தற்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக அவர் தற்போது நடித்து வரும் படம் கூலி. இதை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2ம் உருவாக உள்ளது. இப்படி ரஜினிக்கு வரிசைகட்டி படங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதே நேரம் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் அன்று மணிரத்னம் உடன் இணையும் படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்ப எக்ஸ் தளத்தில் கசிந்துள்ளது. இப்போது வைரலாகி வருகிறது.
கமல் இப்போது தான் 37 ஆண்டுகளுக்கு முன் கமல் மணிரத்னத்துடன் இணைந்து தக் லைஃப்; படத்தில் நடித்து வருகிறார். அதற்கு போட்டியாக ரஜினியும் அதே போல 33 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணையப் போகிறாரோ என்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது. நண்பர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இன்றும் தொடர்வது ஆச்சரியம் தான்.
கமலும் மணிரத்னமும் கடைசியாக 1987ல் நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கமலின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவே அமைந்தது.