Categories: latest news

விஜய்னா யாருன்னு கேட்ட சூப்பர்ஸ்டார்…. தயாரிப்பாளர் சொன்ன அந்தத் தகவல்

பைரவி படத்தை ரஜினியை வைத்து இயக்கியவர் எம்.பாஸ்கர். இவரது மகனும் தயாரிப்பாளருமாக இருப்பவர் பாலாஜி பிரபு. இவர் ரஜினி, விஜய் குறித்து என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

ஆரம்பத்துல 25 படம் வில்லனாவே நடிச்சிக்கிட்டு இருந்தாரு ரஜினி. அவருக்கு வில்லனாகவே லைஃப் ரொம்ப ஜாலியாகப் போச்சு. ஹீரோ கிளிக் ஆகலன்னா நமக்கு கெரியர் போயிடும்னு நினைச்சாரு. அப்புறம் அப்பாவும், கலைஞானம் சாரு அவருக்கிட்ட பேசி நடிக்க வச்சாங்க.

தாணு சார் இந்தப் படத்துக்கு விநியோக உரிமையை வாங்கினார். கலைஞானம் சார் தயாரிப்பாளர். இந்தப் படத்துக்குத் தான் சூப்பர்ஸ்டார்னு தாணு சார் பட்டம் கொடுத்தாரு. முதல்ல வேணாம்னு சொன்னாரு. அப்புறம் தாணு சார்தான் இருக்கட்டும். அது நிலைச்சி நிற்கும்னு சொன்னாரு.

ரஜினி சாரை ஹீரோவா அறிமுகப்படுத்துனாருங்கறது எங்க அப்பா எம்.பாஸ்கர்தான்னு நினைக்கிறப்போ பெருமையா இருக்கு. ரஜினி நல்ல நடிகர். அவருக்கிட்ட நல்ல நடிப்புத்திறமை இருந்தது. தப்புத்தாளங்கள், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் படங்களை எடுக்கும்போது தெரியும். அதனால அவர் வில்லன்ல இருந்து ஹீரோவா வரும்போது அவருக்கு அந்த சுவடுகள் தெரியல.

முதன்முதலா ஒரு அவுட்சைடு பேனர்ல விஜய் நடிச்சது எங்க படம்தான். ஆஸ்கர் மூவீஸ்ல வெளியான விஷ்ணு. நான் தான் தயாரிப்பாளர். இது எனக்கு பெரிய பெருமை தரும் விஷயம். அன்னைக்கு சின்ன நடிகராக இருந்த என்னை நடிக்க வைச்ச ஆஸ்கர் மூவீஸ்சுக்கு நன்றின்னு விஜயே கைபட கடிதம் எழுதினாரு. ரஜினி சாரை அந்தப் படத்துப் பூஜைக்கு வரதுக்காக அழைப்பு கொடுத்தோம்.

அப்போ ‘ஹீரோ யாரு’ன்னு கேட்டாரு. விஜய்னு சொன்னேன். ‘விஜயகாந்தா..’ன்னு கேட்டாரு. ‘நியூ ஃபேஸா…’ன்னு கேட்டாரு. ‘இல்ல சார். எஸ்.ஏ.சி. சார் பையன்’னு சொன்னேன். ‘ஓ…ஓ… நான் கேள்விப்பட்டுருக்கேன்’னாரு. ‘ஓகே ஓகே. நான் கண்டிப்பா வர்றேன்’னாரு. அவரு சொன்ன மாதிரியே வந்து குத்துவிளக்கு ஏற்றி வச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எங்க அப்பா ரஜினியை ஹீரோவா வச்சி முதன்முதலா இயக்குனது எங்களுக்குப் பெருமை. அதே மாதிரி விஜயை வச்சி அவுட்சைடு பேனர்ல முதன் முதலா நாங்க தயாரிச்சது எங்களுக்குப் பெருமை. அன்னைக்கு என்ன சின்ன நடிகன்னு சொன்ன விஜய் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா உயர்ந்து நிக்கிறாரு. அவரு கண்டிப்பா அரசியல்ல ஜெயிச்சி முதல்வரா ஆகணும் என்கிறார் பாலாஜி பிரபு.

sankaran v

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

7 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 hours ago