Ramya pandian: காதலனுடன் கங்கை நதியோரம் கல்யாணம்!... ரிஷிகேஷ்க்கு குடும்பத்துடன் பறந்த ரம்யா பாண்டியன்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:01  )

Ramya pandian: இன்னும் 2 நாட்களில் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற உள்ளதால் குடும்பத்துடன் ரிஷிகேஷ்க்கு விமானத்தில் சென்றிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ரம்யா பாண்டியன். பிரபல நடிகரான அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான திரைப்படத்தில் பெரிய அளவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு சுமாரான வரவேற்பை கொடுத்தது, அதன் பிறகு சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் மிகச்சிறப்பாக விளையாடிய மூன்றாவது இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

படங்களில் கிடைத்த வரவேற்பை விட பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு அதிகம். தற்போது இடும்பன்காரி என்கின்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கின்றார். 34 வயதாகும் ரம்யா பாண்டியன் தொடர்ச்சியாக திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இவருக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகின்றது என சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது.

அதை உண்மையாக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். லோபல் தவான் என்பவரை தான் அவர் காதலித்து வருவதாகவும் வரும் நவம்பர் எட்டாம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. எப்படி இவர்களுக்குள் காதல் வந்தது என்பது ஒரு சுவாரஸ்ய கதை.

கொரோனா காலத்தில் யோகா மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா பாண்டியன் ஆன்லைன் வகுப்பில் யோகா கிளாஸில் சேர்ந்திருந்தார். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த யோகா மாஸ்டர் லோபல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் மனம் ஒத்துபோனது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதலனுடன் ஃபாரினுக்கு வெக்கேஷன் செல்வதற்கு பதிலாக இந்தியாவில் இருக்கும் சிவஸ்தலங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தார்கள்.

மேலும் ரம்யா பாண்டியனுக்கு ஆன்மீக முறைப்படி ஸ்ரீ ரம்யா பாண்டியன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 31 ஆம் தேதி தீபாவளி தினத்தை கூட ரிஷிகேஷ் தளத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். அதே போல் திருமணத்தையும் ஆன்மீக வழக்கம் போல் நடத்த முடிவு செய்திருக்கும் இந்த ஜோடி அங்கு இருக்கும் கங்கை நதியோரம் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து குடும்பத்துடன் ரம்யா பாண்டியன் ரிஷிகேஷனுக்கு விமானத்தில் சென்று இருக்கின்றார்.

Next Story