யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!.. கல்யாணம் எங்க நடக்குது தெரியுமா?!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:03  )

Ramya pandiyan: நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் ரம்யா பாண்டியன். ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் ஆண் தேவதை ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவிலும், மாடலிங் துறையிலும் பெரிய அளவுக்கு போக வேண்டும் என ஆசைப்பட்டார் ரம்யா. வீட்டு மொட்டை மாடியில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரம்யாவுக்கு ரசிகர்களும் உருவானார்கள்.

அதன்மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார் ரம்யா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அதிர வைத்தார்.

விஜய் டிவியின் ஆதரவில் பிக்பாஸ் வீட்டுக்கும் போனார். ஆனால், ரம்யாவின் நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின்னரும் சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போனார். சில நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்தார்.

இனிமேல் சினிமாவில் சாதிப்பது கடினம் என புரிந்துகொண்டாரோ என்னவோ திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் ரம்யா பாண்டியன். லவால் தவான் என்பவரை கரம் பிடிக்கவிருக்கிறார். தவான் யோகா பயிற்சி கொடுப்பவர். மேலும், வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க நினைப்பவர்களுக்கு வழிமுறைகளையும் சொல்லி வருபவர்.

இவர்களின் திருமணம் இமயமலை ரிஷிகேஷ் அருகில் உள்ள ஒரு கோவிலில் வருகிற நவம்பர் 8ம் தேதி நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுபற்றி ரம்யாவே இன்ஸ்டாகிராமில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story