சும்மா இருந்தா எப்படி? மீண்டும் சர்ச்சையில் ரவி மோகன்… இப்படி ஜோடியா போஸ் கொடுத்தா கேட்க மாட்டோமா?

Ravi Mohan: பிரபல நடிகர் ரவி மோகன் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்ட்டா பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இது குறித்து சில தகவல்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒன்றாக இருப்பவர் ரவி மோகன். ஆனால் இவன் நடிப்பில் வெளியாகும் சமீபத்திய படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார்.
பொதுவாக பிரபலங்கள் விவாகரத்து அறிவிக்கும் போது இருவரும் ஒரே மாதிரியான பதிவை பதிவிட்டு பெயர்களை மற்றும் மாற்றிக் கொள்வது தான் வழக்கம். ஆனால் ரவி மோகனின் விஷயத்தில் அதில் சில அதிர்ச்சி விஷயங்கள் நடந்தது.
விவாகரத்து அறிவிப்பு வெளியாகி சில தினங்களில் அவருடைய மனைவி ஆரத்தி இந்த விஷயம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ரவி மோகன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் தான் மனைவியை விவாகரத்து செய்வதாக தகவல்கள் பரவியது.
அவர் பிரபல ஆல்பம் பாடகி கேனிஷா பிரான்சிஸ் என்றும், கோவாவில் இருவரும் பல இடங்களில் தனிமையில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் கசிந்தது. அது மட்டுமல்லாமல் ரவி மோகனின் காரில் கெனிஷா சென்று போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிய ஆதாரங்களும் இணையத்தில் கசிந்தது.
இதனால் ரவி அமைதியாக இருக்க முடியாமல் விவாகரத்திற்கான உண்மையான காரணத்தை உடைத்தார். என்னுடைய மனைவி என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை. என்னை சந்தேகம் கொள்கிறார். என்னுடைய சம்பளம் குறித்த எந்த தகவலும் எனக்கு தெரியாது. என்னுடைய சொத்தும் என்னிடம் இல்லை என அவர் உடைத்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
அதுமட்டுமல்லாமல் கெனிஷா ஒரு மனோதத்துவ நிபுணர் என்றும் என்னுடைய மனசிக்கலுக்காக தான் அவரை சந்தித்தேன் என்றும் ரவி மோகன் உடைத்த உண்மை அதைத் தொடர்ந்து இருவரும் இந்த விஷயம் குறித்து மறுப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர்.
அதைத்தொடர்ந்து அந்த விஷயம் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரவி மோகன் கெனிஷா பிரான்சிஸுக்கு இன்ஸ்ட்டா பதிவில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.