Ravi Mohan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அண்ணன் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் கவனத்தைப் பெற்று முன்னணி நடிகராக உயர்ந்தார். பெரும்பாலும் இவரின் வெற்றி படங்கள் அனைத்தும் அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தவையாக இருக்கும்.
அதிலும் இவர்கள் கூட்டணியில் உருவான தனி ஒருவன் திரைப்படம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்று பெரும் வரவேற்பை பெற்ற படமாகவும் இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அண்மையில் மோகன் ராஜா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதற்கான முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து விட்டதாகவும் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் ரவி மோகனுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக ஹிட் படங்கள் எதுவும் அமையாமல் இருந்தது.
திரை வாழ்க்கையிலும் பின்னடைவு சந்தித்ததை அடுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது மனைவி உடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்து விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். இதனால் ரவி மோகனுக்கு திரை வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தொடர்ந்து சோகத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாடகி கெனிஷாவுடன் காதல் வலையில் சிக்கி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
திரை வாழ்க்கையை பொருத்தவரை சமீப காலமாக இவரின் படங்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் ரவி மோகன் ஃபுல் ஃபார்ம் இல் அடுத்தடுத்து படங்களை களம் இறக்க தயாராகி வருகிறார். அந்த வகையில் ரவி கைவசம் தற்போது ஆறு படங்கள் உள்ளன. ஜீனி படம் படபிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் வெளியாக உள்ளது. மேலும் கராத்தே பாபு வில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு பராசக்தி இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது. இதை அடுத்து ப்ரோ கோட் என்ற படத்தின் வேலைகள் அதிரடியாக நடைபெற்ற வருகிறது. இதனுடன் மோகன் ராஜா, ரவி மோகன் அண்ணன் தம்பி கூட்டணியில் உருவாக இருக்கும் தனி ஒருவன்- 2 படத்தின் வேலைகளும் ஆரம்பிக்க உள்ளது. அதனை தொடர்ந்து ரவி மோகன் ஒரு பெரிய பட்ஜெட்டில் கமிட்டாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆக இன்னும் இரண்டு மூன்று வருடத்திற்கு பிஸியாக உள்ளார் புது மாப்பிள்ளை ரவி மோகன்.
