ரியல் மிலிட்டரி ஆஃபிஸருக்கே மரியாதை வரும்! ரியல் முகுந்தனா இருந்த சிவகார்த்திகேயன்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:59  )

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

இந்த படம் மறைந்த மேஜர் முகந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை கதைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் என்னெல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை பற்றி படத்தில் நடித்த சக நடிகரும் சீரியல் நடிகருமான ஸ்ரீ ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

எத்தனை வலிகள் இருந்தாலும் அதை சிவகார்த்திகேயன் வெளியே சொல்லவே மாட்டாராம். அந்த அளவுக்கு படத்தில் கடினமான உழைப்பை போட்டிருக்கிறார் என்று ஸ்ரீ கூறினார். மேலும் இந்த படத்திற்காக உண்மையிலேயே பம்பாயில் ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டாராம் சிவகார்த்திகேயன்.

அப்போது மிகவும் ஸ்லிம்மாக லாங் ஹேர் வைத்துக்கொண்டு இருந்தவர் இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் ஒரு ஆர்மி மேனாக வந்து இறங்கினாராம். மிலிட்டரி ஆடை அணிந்து ஒரு கூலிங் கிளாஸ் போட்டு நாற்காலியில் கெத்தாக அமர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனை பார்க்கும் பொழுது உண்மையிலேயே அங்கிருந்த மிலிட்டரி ஆபீஸர்களுக்கு அவரை பார்த்து ஒரு மரியாதை வந்துவிடும்.

அந்த மாதிரியான லுக்கில் சிவகார்த்திகேயன் இருந்தார். அவர் சிவகார்த்திகேயனாக இந்த படத்தில் இல்லை. உண்மையிலேயே மேஜர் முகந்த் வரதராஜனாகவே இருந்தார். அந்த அளவுக்கு உணவில் இருந்து பேசும் வார்த்தைகள் வரை ஒரு மிலிட்டரி மேன் எந்த அளவுக்கு இருப்பாரோ அப்படியேதான் இந்த படம் முழுக்க வாழ்ந்திருந்தார் சிவகார்த்திகேயன் என ஸ்ரீ கூறினார்.

அதுவும் மில்ட்ரிக்காக காஷ்மீரில் ரியல் லொகேஷனில் படமாக்கியதால் உண்மையிலேயே மிலிட்டரியில் வேலை பார்த்தவர் மாதிரி தான் சிவகார்த்திகேயன் தெரிந்தாராம். அதனால் இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஸ்ரீ கூறினார்.

சிவகார்த்திகேயனை பற்றி நடிகர் நெப்போலியன் கூறிய ஒரு தகவலும் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது .ஏற்கனவே அமரன் இசை வெளியீட்டு விழாவில் அஜித் சொன்னதை சிவகார்த்திகேயன் குறிப்பிட்டு அவருடைய வளர்ச்சியை பற்றி கூறியிருந்தார்

அதேபோல நெப்போலியன் ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்வார்கள். ஆனால் தமிழகத்தில் பிறந்து அதுவும் அருகில் உள்ள திருச்சியில் இருந்து வந்தவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் நாம் இன்னும் பெருமைப்பட தான் வேண்டுமே தவிர சிவகார்த்திகேயனை பார்த்து பொறாமைப்படுவதோ அவரைப் பற்றி இழிவாக பேசுவதோ அதெல்லாம் மிகப்பெரிய தவறு’ என நெப்போலியன் கூறியிருந்தார் .

இந்த அளவுக்கு ஒரு ஆங்கராக இருந்து இன்று விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியான நிலையில் சிவகார்த்திகேயன் இப்போது இருக்கிறார் என்றால் எத்தனை போராட்டங்களையும் கஷ்டங்களையும் கடந்து வந்திருப்பார் என்பதை தான் பார்க்க வேண்டும்.

Next Story