விஜயை ரம்பா சந்தித்து பேசியதற்கு நிஜமான காரணமே வேற!... அட சொல்லவே இல்ல!..

by ராம் சுதன் |

90களில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் ரம்பா. ஆந்திராவிலிருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை இவர். கதிர் இயக்கிய உழவன் மகன் படம் மூலமே ரம்பா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட் அடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

இந்த படத்தில் தொடையழகை காட்டி இவர் ஆடிய நடனங்கள் ரசிகர்களை சூடாக்கியது. அதன்பின் தொடையழகி ரம்பா எனவும் பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார்கள். அந்த படத்தின் ஹிட்டுக்கு பின் விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க துவங்கினார்.

சுந்தர் சி இயக்கத்தில் மட்டும் பல படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ரஜினியுடன் அருணாச்சலம் படத்திலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தாய்மொழியான தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி 2 பெண் குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து வாழ்ந்தார். அதன்பின் கணவருடன் பிரச்சனை தீர்ந்து மீண்டும் ஒன்றாக வாழ்ந்தனர். அதன்பின் ரம்பாவுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு விஜயை தனது குடும்பத்துடன் சந்தித்து பேசினார் ரம்பா. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தனது மகன் விஜயின் தீவிர ரசிகன் என்பதால் விஜயை சந்தித்து பேசியதாக ரம்பா விளக்கமும் சொன்னார்.

அது உண்மை என்றாலும் ரம்பாவுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம். கதாநாயகியாக இல்லை என்றாலும் படம் முழுக்க வருவது போல முக்கியமான வேடமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம். இது தொடர்பாகவே அவர் விஜயை சந்தித்து வாய்ப்பு கேட்டார் என செய்திகள் இப்போது கசிந்திருக்கிறது.

Next Story