பாலாவையே கழட்டிவிட்ட சூர்யா ஆர்.ஜே.பாலாஜிக்கு ஓகே சொன்னதன் பின்னணி!.. இவ்வளவு இருக்கா?!..
RJ Balaji: சென்னையில் ரேடியோ ஜாக்கி அதாவது ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இயக்குனர் சுந்தர் சி அவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு நடிப்பே வரவில்லை, பேசாமல் மீண்டும் ஆர்.ஜே வேலைக்கே போய்விடலாம் என நினைத்தார் பாலாஜி.
ஆனால், அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார் சுந்தர் சி. அதன்பின் சில படங்களில் கதாநாயகனின் நண்பனாக நடித்தார். ஒரு கட்டத்தில் நடிப்பு அவருக்கு வசப்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஒரு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டது.
அதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. அப்படி அவர் நடித்து வெளியான எல்.கே.ஜி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார். அவரே இயக்குனராகவும் மாறினார். வீட்ல விசேஷங்க, மூக்குத்தி அம்மன் படங்களை அவரே இயக்கினார்.
இதில், மூக்குத்தி அம்மன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் மூக்குத்தி அம்மன் 2 படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால், தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையே பஞ்சாயத்து ஏற்பட்டது அது நடக்கவில்லை. ஒருபக்கம் விஜயை வைத்து படமெடுக்க ஆசைப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி அவரை சந்தித்து கதையும் சொன்னார்.
ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இந்நிலையில்தான் சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இது விஜயிடம் சொன்ன அதே கதையாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
இடையில், பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்து அதிலிருந்து வெளியேறினார் சூர்யா. அதன்பின் கங்குவா படத்தில் நடித்து முடித்தார். அதன்பின், கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் நடித்துவிட்டு இப்போது ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடிக்கப்போகிறார். நிறைய இடைவெளி விட்டு விட்டதால் சூர்யாவுக்கோ உடனே ஷூட்டிங் போக வேண்டும். ஆர்.ஜே.பாலாஜியிடம் முழுக்கதையும் தயாராக இருந்தது. அதனால்தான் அவரை டிக் அடித்திருக்கிறார்.
படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2025ம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.