சிறுத்தை சிவாவை ஏன் விடலனு இப்போ தெரியுதா?.. சூர்யாவிடம் சொன்ன அஜித்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:28  )

சூர்யாவின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் பல மொழிகளில் தயாராகி இருக்கிறது. ஒரு பெரிய பேன் இந்தியா படமாக கங்குவா திரைப்படம் அமைய இருக்கிறது.

சூர்யாவின் கெரியரில் இந்த படம் தான் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கும். இதுவரை இல்லாத அளவில் வேற எந்த படத்திற்கும் போடாத உழைப்பை சூர்யா கங்குவா திரைப்படத்திற்காக போட்டு இருக்கிறார் .கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் இந்த படத்திற்காக மட்டுமே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வந்தார் சூர்யா.

வித்தியாசமான கெட்டப் வித்தியாசமான கதைக்களம் என முற்றிலுமாக இந்த படத்திற்காக மிகவும் மெனக்கிட்டு இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் ரசிகர்களை சந்தித்து படத்தை பற்றி பிரமோட் செய்தனர் .

இந்த நிலையில் மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கங்குவா திரைப்பட குழு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டது. அதில் முக்கியமாக சூர்யா சொன்னது தான் பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அதுவும் சமீபத்தில் தான் அஜித்தை சந்தித்து பேசினாராம் சூர்யா.

அப்போது அஜித் சூர்யாவிடம் இப்போ தெரியுதா ஏன் நான் சிறுத்தை சிவாவை விடவில்லை என்று என கேட்டாராம். மேலும் நீங்கள் ஒரு முறை சிவாவுடன் பணியாற்றி விட்டால் அவர் வேறொரு நடிகருடன் பணியாற்றும் போது நீங்கள் பொறாமைப்படுவீர்கள். அந்த அளவுக்கு அவரின் படப்பிடிப்பு நிறைவாக இருக்கும் என அஜித் கூறினாராம்.

இதிலிருந்து சூர்யாவுடன் சிறுத்தை சிவா இணைந்தது அஜித்திற்கு பொறாமையை தந்திருக்கிறது என்றுதான் அவர் சொன்ன கருத்திலிருந்து நமக்கு உணர்த்துகிறது.

Next Story