விஜயின் மாநாடு குறித்த கேள்விக்கு டென்ஷனான எஸ்.ஏ.சி! அப்படி என்ன கேட்டாங்க

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:55  )

விஜயின் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம் சூடு பிடித்து வருகிறது. தன்னுடைய அரசியலை நிலைநிறுத்த என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எல்லாம் செய்ய வேண்டும் என ஒவ்வொன்றாக விஜய் யோசித்து வருகிறார். அதில் முதல் கட்டமாக ரஜினி ரசிகர்களை காக்கா பிடித்து விட்டால் அது ஒரு பெரிய பலம் என நினைக்கிறார்.

அதனால் கூடிய சீக்கிரம் அவர் ரஜினியை போய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய நெனப்பில் மண்ணள்ளி போடும் விதமாக விஜய் ரசிகர்கள் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதில் கோபமான ரஜினி ரசிகர்கள் விஜயை கடுமையாக எச்சரித்து வருகிறார்கள். தன்னுடைய ரசிகர்களை விஜய் கட்டுப்படுத்தாவிட்டால் அதன் பலனை அரசியல் களத்தில் அவர் சந்திப்பார் என அவருக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படி அவருடைய ரசிகர்களாலேயே விஜயின் அரசியலுக்கு பெரிய ஆபத்து வரும் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் இளைஞர்கள் விஜய் பக்கம் போவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தான் எதையும் சொல்ல முடியும்.

கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கட்சியின் கொடியையும் சின்னத்தையும் அறிவித்த விஜய் இதுவரை அவருடைய அரசியல் கொள்கை என்ன என்பதை கூறவில்லை. அதை தன்னுடைய முதல் மாநாட்டில் கூறுவதாக தெரிவித்திருந்தார். விஜயின் தவெக மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு உங்களுடைய ஆலோசனை அறிவுரை ஏதேனும் இருக்கிறதா என விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரிடம் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு கோபமான எஸ்.கே சந்திரசேகர் ‘இப்போ எதுக்கு இங்க வந்திருக்கோம்? கலை சம்பந்தமாக வந்திருக்கோம். அது சம்பந்தமான கேள்விகளை மட்டும் தான் கேட்கணும். மற்ற கேள்விகளை எல்லாம் விட்டு விடுங்கள்’ என கூறினார்.

ஆனால் விடாமல் கேட்ட நிருபர் மீண்டும் விஜய் பற்றியே கேள்வியையே கேட்டார். இதில் கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர் ‘இப்போ என்ன உங்களுக்கு? நான் யாரையாவது திட்டனும். உங்களுக்கு கண்டன்ட் வேணும். அவ்வளவு தானே?

எந்த இடத்தில என்ன கேள்வி கேட்கணும் அப்படிங்கிற ஒரு வரைமுறை பத்திரிகையாளர்களுக்கு இருக்கு. அதுதான் பத்திரிகை தர்மம் .உங்களுக்கு நான் அட்வைஸ் கொடுக்கிற இடத்துல இருக்கிறேனு நினைக்கிறேன். என் பிள்ளயா நினைச்சு சொல்றேன். எந்த இடத்துல என்ன கேள்வி கேட்கணுமோ அதை மட்டும் கேளுங்க’ என கூறினார் எஸ் ஏ சந்திரசேகர்.

Next Story