டாஸ்மாக்கை ஒழிக்கணும்னு சொல்றீங்க.. விஜய் செய்வாரா? நிருபர் கேள்விக்கு எஸ்ஏசி கொடுத்த பதில்

by ராம் சுதன் |

ஒரு நாயை மையமாக வைத்து தயாராகி இருக்கும் திரைப்படம் கூரன். இந்த திரைப்படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் ,ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஆந்திராவை சேர்ந்த இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு நிருபர் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகரனிடம் படத்தில் நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.

போறப்போக்கில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர் வந்தாலும் டாஸ்மாக்கை மூட முடியவில்லை. அதை ஒழிக்கணும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அடுத்ததாக உங்கள் மகன் விஜய் அரசியலுக்கு வருகிறார். அவர் வந்த பிறகு டாஸ்மாக்கை மூடுவதற்கான வழி திறக்கப்படுமா என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு எஸ் ஏ சந்திரசேகர் இதை அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

என்னிடம் கேட்கிறீர்கள். நான் ஒரு திரைப்பட எழுத்தாளர்., டைரக்டர் ,நடிகன். என்னுடைய கருத்தை படத்தில் சொல்லி இருக்கிறேன். எந்த கட்சி வந்தாலும் இதை செய்து கொண்டிருக்கிறார்கள் .புதுசா வர்றவங்க இதை ஒழிக்கணும் .அதுதான் என்னுடைய ஆசை .ஒழிக்க வைக்கிறது உங்கள் கையில் இருக்கிறது என பதில் கூறினார் எஸ் ஏ சந்திரசேகர். இவர் சொல்வது மாதிரி இத்தனை ஆண்டுகளாக இந்த தமிழ் நாட்டை எத்தனையோ பேர் ஆட்சி செய்து விட்டு போயிருக்கின்றனர்.

அவர்களிடம் எதிர்பார்த்ததை கண்டிப்பாக விஜயிடமும் மக்கள் எதிர்பார்ப்பார்கள். இதுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் செய்ய தவறியதை விஜய் செய்து விட்டால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும். இதுதான் மக்களின் ஆசை. அதற்கேற்ப விஜய் தான் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே விறுவிறுப்பாக தன்னுடைய கட்சி பணிகளை செய்து கொண்டு வருகிறார்.

ஆளும் கட்சியையும் ஒன்றிய அரசையும் சரமாரியாக தாக்கி பேசி வருகின்றார். இதுவும் மக்களுக்கு அவர் மீது ஒரு நம்பிக்கை பிறந்திருக்கின்றது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான முன்னேற்பாடுகளை விஜயும் அவரது கட்சி நிர்வாகிகளும் செய்து கொண்டு வருகிறார்கள்.

Next Story